Recent Articles

கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிட PMGG தீர்மானம்

கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிட PMGG தீர்மானம்

எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது என நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தீர்மானித்துள்ளது. இன்று (19/05/2012) சனிக்கிழமை நடைபெற்ற இயக்கத்தின் சூறா சபைக் கூட்டத்திலேயே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இதேவேளை கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் அங்கத்தவர்களுக்கு விரிவாக விளக்கமளிக்கும் கூட்டம் நாளை (20/05/2012) ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணிக்கு இயக்கத்தின் மக்கள் அரங்கில் நடைபெறவுள்ளது. இக் கூட்டத்தில் சகல அங்கத்தவர்களையும் கலந்து கொள்ளுமாறு நல்லாட்சிக்கான

கிழக்கு மாகாணசபைத்தேர்தல்: எதனை சாதிக்கப்போகிறோம்?

கிழக்கு மாகாணசபைத்தேர்தல்: எதனை சாதிக்கப்போகிறோம்?

கிழக்கு மாகாண சபை உள்ளிட்ட இலங்கையின் மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தலை செம்டம்பர் மாத இறுதியில் நடாத்த உள்ளதாக அரசு அறிவித்துள்ள நிலையில் அதற்கான முன்னெடுப்புகள், எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியிலும் அரசியல் ஆர்வலர்கள் மத்தியிலும் அதிகரித்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. இந்நிலையில் கிழக்குமாகாண சபை தொடர்பிலான அதிகரித்த அவதானம் பல்வேறு தரப்புகளிலும் தோன்றியிருப்பதும், பல்வேறு அரசியல் கட்சிகள் இத்தேர்தல் களத்தினை எவ்வாறு பயன்படுத்த முடியும் என சிந்தித்து வருவதும்கூட தெளிவாகத் தெரிகிறது. குறிப்பாக முஸ்லிம் அரசியல் தலைமைத்துவங்கள் எவ்வாறான

நல்லாட்சி ஒன்றுக்கான சமூக விழிப்பூட்டலையும், வலுவூட்டலையுமே PMGG மேற் கொண்டு வருகின்றது

நல்லாட்சி ஒன்றுக்கான சமூக விழிப்பூட்டலையும், வலுவூட்டலையுமே PMGG மேற் கொண்டு வருகின்றது

PMGG இணையத்தளத்திற்கு அபூ இம்ரான் என்கின்ற வாசகரினால் அனுப்பி வைக்கப்பட்டிருந்த வாசகர்கருத்துக்கு அபூ நிதா என்ற வாசகரினால் அனுப்பப்பட்டிருந்த கருத்து கீழே பிரசுரிக்கப்படுகின்றது. அபூ இம்ரானின் கருத்தைப் படித்தேன். ஊழலும் மோசடிகளும், நம்பிக்கைத் துரோகங்களும் நிறைந்த அரசியல் முறைமையூம் அதனை எவ்வித தயக்கமும் கேள்விகளுமின்றி அங்கீகரிக்கின்ற மனோ நிலையும் நிலவுகின்ற சூழ்நிலையில் ஓரிரு நல்ல மனிதர்களை அரசியலில் நுழைப்பதனால் மாத்திரம் எதனையும் சாதித்து விட முடியாது என்பது உண்மைதான். இந்த புரிதலின் அடிப்படையிலேயே PMGG யும் செயற்பட்டு

மாகாண சபை தேர்தல் தொடர்பில் PMGGயின் பொது கூட்டம் இன்று நடைபெற்றது (புகைப்படம் இணைப்பு)

மாகாண சபை தேர்தல் தொடர்பில் PMGGயின் பொது கூட்டம் இன்று நடைபெற்றது (புகைப்படம் இணைப்பு)

காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் எதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் பொதுமக்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் பொதுக் கூட்டம் ஒன்றை நடாத்தியது. இக்கூட்டம் இன்று இரவு 8.15 மணியளவில் PMGGயின் மக்கள் அரங்கில் நடைபெற்றது. நிகழ்விற்கு தலைமை தாங்கி உரையாற்றினார் சூறாசபை உறுப்பினரும், PMGGயின் கல்வி அபிவிருத்திப் பிரிவின் தலைவருமான வித்யாகீர்த்தி MM. அமீரலி ஆசிரியர். இதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாண சபை தேர்தல் தொடர்பில் விளக்கங்களை முன்வைத்து உரையாற்றினார் சூறாசபை உறுப்பினரும், காத்தான்குடி

தம்புள்ள பள்ளிவாயல் விவகாரம் சம்பந்தமாக றிஸ்வி முப்தி தெரிவித்துள்ள கருத்து தொடர்பில், பத்தி எழுத்தாளர் லதீப் பாறூக்

தம்புள்ள பள்ளிவாயல் விவகாரம் சம்பந்தமாக றிஸ்வி முப்தி தெரிவித்துள்ள கருத்து தொடர்பில், பத்தி எழுத்தாளர் லதீப் பாறூக்

தம்புள்ள பள்ளிவாயல் விவகாரம் தொடர்பில் றிஸ்வி முப்தி அவர்கள் தெரிவித்துள்ள கருத்துத் தொடர்பாக ஆங்கிலப் பத்திரிகையின் பிரபல பத்தி எழுத்தாளர் லதீப் பாறூக் அவர்கள் எழுதிய ஆங்கில கட்டுரையின் தமிழ் வடிவம் வாசகர்களுக்காக… “தம்புள்ளை விடயத்தில் முஸ்லிம்கள் விட்டுக்கொடுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்கின்ற றிஸ்வி முப்தியின் கருத்து, முஸ்லிம் சமூகத்தை விற்று காடைத்தனத்துக்கு பரிசளிப்பதாகவே அர்த்தப்படும்” அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா சபையின் தலைவர் றிஸ்வி முப்தி அவர்கள் கடந்த 04.05.2012 அன்று றியாத் நகரில்

தம்புள்ளை பள்ளிவாசல் சம்பவத்திற்கெதிராக பொதுமக்களின் கையெழுத்துக்களைத் திரட்டும் பணி இன்று இடம்பெற்றது

தம்புள்ளை பள்ளிவாசல் சம்பவத்திற்கெதிராக பொதுமக்களின் கையெழுத்துக்களைத் திரட்டும் பணி இன்று இடம்பெற்றது

கடந்த 20.04.2012 அன்று இடம்பெற்ற தம்புள்ளை பள்ளிவாசல் சம்பவத்தைக் கண்டித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு மகஜர் ஒன்றைக் கையளிக்குமுகமாக பொதுமக்களின் கையெழுத்துக்களைத் திரட்டும் வேலைத் திட்டம் ஒன்றை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் இன்று மேற்கொண்டது. இன்று வெள்ளிக்கிழமை காத்தான்குடியின் சகல ஜும்ஆப் பள்ளிவாயல்களிலும் இந்த கையெழுத்துத் திரட்டும் பணிகள் சிறப்பாக நடைபெற்றன. இன்று ஜும்ஆவிற்கு சமூகமளித்திருந்த சகலரும் இதற்கான ஒத்துழைப்புக்களையும், பங்களிப்புக்களையும் வழங்கி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.