அமெரிக்க தூதரக பிரதிநிதிகளுடன் NFGG விசேட சந்திப்பு!May 25, 2017 4:07 pm

(NFGG ஊடகப் பிரிவு)

அமெரிக்க தூதரக பிரதிநிதிகளுடனான விசேட சந்திப் பொன்றினை NFGG பிரதிநிதிகள் மேற் கொண்டனர். இந்த சந்திப்பு நேற்று (24.05.2017) கொழும்பில் இடம் பெற்றது. இதில் NFGG யின் rnதவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான். அதன் பொதுச் செயலாளர் நஜா முஹம்மட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாட்டில் அண்மைக்காலமாக சிறுபான்மை மக்களுக்கெதிராக தீவிரமடைந்து வரும் இனவாத நடவடிக்கைகள் தொடர்பிலும் அவற்றைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் காட்டிவரும் அசிரத்தை தொடர்பிலும் தெளிவூட்டும் முகமாக இந்த சந்திப்பு மேற்கொள்ளப்பட்டது.
கடந்த ஒரு மாத காலமாக மிகவும் தீவிரமடைந்திருக்கும் முஸ்லிம்களுக்கெதிரான இனவாத நடவடிக்கைகள் தொடர்பில் NFGG பிரதிநிதிகள் இச்சந்திப்பின் போது விரிவாக எடுத்துக் கூறினர். அத்தோடு சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதில் அரசாங்கம் எவ்வளவு தூரம் அசிரத்தையாக நடந்து வருகிறது என்பதையும் தெளிவுபடுத்தினர்.

முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து நடாத்தப்பட்ட இனவாத நடவடிக்கைகள் மற்றும் தாக்குதல்கள் தொடர்பான அறிக்கையொன்றும் அமெரிக்க பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டது.

தற்போதைய நிலவரங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளை NFGG மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு முக்கிய பகுதியாக அமெரிக்க சமூக பிரதிநிதிகளுடனான சந்திப்பினை NFGG நடாத்தியது. இலங்கை விவகாரங்களில் செல்வாக்குச் செலுத்தும் ஏனைய முக்கிய சர்வதேச நாட்டு பிரதிநிதிகளையும் சந்தித்து இவ்விடயங்களை தெளிவு படுத்தும் நடவடிக்கைகளையும் NFGG மேற்கொள்ளவுள்ளது.


கருத்துக்களை இங்கே பதியவும்

குறிப்பு:

உங்களின் மின்னஞ்சல் முகவரி பிரசுரிக்கப்படமாட்டது..
* அடையாளமிடப்பட்டவை கட்டாயம் பூரணப்படுத்தப்படல் வேண்டும்.

குறிப்பு:

வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் PMGG இன் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், ஆக்கங்களுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.