அமைச்சர் மனோவுடன் NFGG மேற்கொண்ட விசேட சந்திப்பு!May 19, 2017 10:21 am

(NFGG ஊடகப் பிரிவு)

தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் கௌரவ மனோகனேசன் அவர்களுடனான விசேட சந்திப் பொன்றினை NFGG பிரதிநிதிகள் இன்று WhatsApp Image 2017-05-19 at 22.37.18(19.05.2017) மேற்கொண்டனர்.

அமைச்சரின் உத்தியோக பூர்வ கொழும்பு அலுவலகத்தில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் NFGG யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், அதன் பொதுச் செயலாளர் நஜா முஹம்மட், தலைமைத்துவ சபை உறுப்பினர்களான சட்டத்தரணி முஹம்மட் இம்தியாஸ், மற்றும் முஹம்மட் ஹனான் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.

நாட்டில் தற்போது மீண்டும் தீவிரமடைந்து வரும் இனவாத சக்திகள் தொடர்பில் அமைசச்சர் மனோ கனேசன் அவர்கள் தெரிவித்திருக்கும் துணிச்சலான நியாயமான கருத்துக்களுக்கு ஆதரவினையும் நன்றியினையும் NFGG பிரதிநிதிகள் தெரிவித்துக் கொண்டனர்.

கடந்த 17.05.2017 அன்று சகவாழ்வு அமைச்சுக்கு வருகை தந்து அத்துமீறலான வகையிலும், அச்சுறுத்தும் வகையிலும் நடந்து கொள்ள முற்பட்ட கலகொட ஞானசார தேரர் குழுவினருக்கு அமைச்சர் மனோகனேசன் அவர்கள் துணிச்சலான தெளிவான பதிலினை வழங்கியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் அவர்கள் “இந்த நாட்டிற்கு எல்லா சமூகங்களுமே வெளியிலிருந்து வந்தவர்களின் சந்ததிகள்தான் எனவும் இந்த நாடு எல்லா மக்களுக்கும் சமஉரிமை உடையது” என்பதையும் மிக ஆணித்தரமாக தெரிவித்திருந்தார்.

அமைச்சர் மனோகனேசன் அவர்களின் துணிச்சலான நியாயமான இந்தக் கருத்துக்கு ஆதரவும் நன்றியும் தெரிவிப்பதாக NFGG பிரதிநிதிகள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.

அத்தோடு எவ்வாறு இந்த இனவாத நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

நாட்டின் சகவாழ்வுக்கு பொறுப்பாக அமைச்சர் என்ற வகையில் சக தமிழ், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்து அத்தோடு பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த இனவாத சக்திகளுக்கு எதிரானவர்களையும் இணைத்துக் கொண்டு எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் கலந்துரையாடப்பட்டது. அந்த வகையில் சர்வதேச சமூகப் பிரதிநிதிகளுக்கு இந்த விடயங்களைத் தெளிவுபடுத்தி அதன் மூலம் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க்ககூடிய நடவடிக்கைகள் சிலவற்றை உடனடியாக மேற்கொள்வதெனவும் முடிவு செய்யப்பட்டது.

இந்த நடவடிக்கைகள் அனைத்துக்குமான முழு ஒத்துழைப்புக்களையும், பங்களப்புக்களையும் வழங்குவதாக NFGG பிரதிநிதிகள் உறுதியளித்தனர்.

சந்திப்பின் இறுதியில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் யாப்புருவாக்க நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.


கருத்துக்களை இங்கே பதியவும்

குறிப்பு:

உங்களின் மின்னஞ்சல் முகவரி பிரசுரிக்கப்படமாட்டது..
* அடையாளமிடப்பட்டவை கட்டாயம் பூரணப்படுத்தப்படல் வேண்டும்.

குறிப்பு:

வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் PMGG இன் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், ஆக்கங்களுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.