அமைச்சர் ராஜிதவுடன் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சந்தித்து, நடப்பு விவகாரங்கள் தொடர்பாக கலந்துரையாடல்.October 11, 2017 11:05 am

(NFGG ஊடகப் பிரிவு)

 நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினர், நேற்று (10.10.2017) மாலை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை அவரது அமைச்சு அலுவலகத்தில் சந்தித்து உரையாடினர்.

 WhatsApp Image 2017-10-10 at 9.57.12 PM (1)2015 இல் ஆட்சி மாற்றத்திற்குப் பங்களித்தவர்கள் என்ற வகையில், இன்றைய நடப்புகள் தொடர்பான பல விடயங்கள் கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

 அரசியலமைப்பு தொடர்பான அம்சங்கள், வடக்கு கிழக்கு இணைப்பு - பிரிப்பு விவகாரம், மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டம், நாட்டில் தூண்டி விடப்படும் இனவாத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தல் போன்ற பல விடயங்கள் இதன்போது ஆராயப்பட்டன.

 குறிப்பாக, அரசாங்கத்தில் செல்வாக்கு மிக்க அமைச்சர் என்ற வகையில், மக்களது நிலைப்பாடுகளும் கள யதார்த்தங்களும் அவரின் கவனத்திற்கு முன்வைக்கப்பட்டன. இந்த விடயங்கள் குறித்து தான் கவனத்தில் கொள்வதாக அவர் கருத்துத் தெரிவித்தார்.

 இந்த சந்திப்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் நஜா முஹம்மத், பிரதித் தவிசாளர் சிராஜ் மஷ்ஹூர், தலைமைத்துவ சபை உறுப்பினர்களான ஸஃப்றி அப்துல் வாஹித், முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டொக்டர் றூமியும் இந்த சந்திப்பில் பங்குபற்றினார்.

WhatsApp Image 2017-10-10 at 9.57.12 PM (1) WhatsApp Image 2017-10-10 at 9.57.12 PM WhatsApp Image 2017-10-10 at 9.57.13 PM (1) WhatsApp Image 2017-10-10 at 9.57.13 PM (2) WhatsApp Image 2017-10-10 at 9.57.13 PM


கருத்துக்களை இங்கே பதியவும்

குறிப்பு:

உங்களின் மின்னஞ்சல் முகவரி பிரசுரிக்கப்படமாட்டது..
* அடையாளமிடப்பட்டவை கட்டாயம் பூரணப்படுத்தப்படல் வேண்டும்.

குறிப்பு:

வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் PMGG இன் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், ஆக்கங்களுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.