இன்று இடம்பெற்ற PMGGயின் கவனயீர்ப்புப் போராட்டம் (படங்கள்)May 30, 2013 9:24 am

PMGG Rally 30.05.2013 (27)காத்தான்குடி நகரசபையில் வெளிப்படைத் தன்மையை வெளிப்படுத்தக் கோரி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் இன்று காலை 08.00 மணி முதல் 09.00 மணி வரை கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடாத்தியது.

காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபத்தின் முன்றலில் இடம்பெற்ற இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தின்போது நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் பிரதிநிதிகள்...

  • நகரசபை நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை பேணுமாறும்,
  • நகரசபையின் கேள்விச்சபை மற்றும் நிலையியல்க் குழுவின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துமாறும்,
  • நகரசபையில் தீர்மானம் எடுக்கப்படாத நடவடிக்கைளை தன்னிச்சையாக மேற்கொள்ளப்படுவதை நிறுத்துமாறும்,
  • அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் இடம்பெறுகின்ற நிதி நிருவாக நடவடிக்கைகளில் இடம்பெறுகின்ற மோசடிகளை நிறுத்துமாறும்,
  • பள்ளிவாயல்களின் சொத்துக்களை ஆக்கிரமிப்பதை நிறுத்துமாறும்,
  • நகரசபை அமர்வுகளில் ஊடகவியலாளர்களையும் அனுமதிக்குமாறும்,
  • நகரசபைச் செயலாளரே! சட்டத்தின் வழியில் நகரசபயை வழி நடாத்தகோரியும்

 என்ற எட்டு அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து அதற்கான சுலோகங்களை ஏந்தியிருந்தனர்.

இதன்போது காத்தான்குடி நகரசபையில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சார்பில் மக்கள் பிரதிநிதிகளான அஷ்ஷெய்க் ALM. சபீல் (நளீமி), சகோதரர் MHA. நசீர் உட்பட சூறாசபை உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் பலரும் பங்கெடுத்துக்கொண்டனர்.

[nggallery id=408]


கருத்துக்களை இங்கே பதியவும்

குறிப்பு:

உங்களின் மின்னஞ்சல் முகவரி பிரசுரிக்கப்படமாட்டது..
* அடையாளமிடப்பட்டவை கட்டாயம் பூரணப்படுத்தப்படல் வேண்டும்.

குறிப்பு:

வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் PMGG இன் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், ஆக்கங்களுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.