“எமது வெற்றி உறுதியாகி வருவதனால் எம்மை இலக்கு வைத்து தாக்குதல் நடாத்த தொடங்கியிருக்கிறார்கள்” ஊடகவியலாளர் சந்திப்பில் NFGG தவிசாளர் அப்துர் ரஹ்மான் !February 6, 2018 8:18 pm

20180206_103002(NFGG ஊடகப் பிரிவு)

“எமது தேர்தல் வெற்றி நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், எமது வேட்பாளர் ஒருவரை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் ஒன்று இன்று (06.02.2018) நடாத்தப்பட்டுள்ளது. இதனை நாம் வன்மையாக கண்டிப்பதோடு பொலிஸார் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

இன்று(06.02.2018) காலை 10.00 மணியளவில் அவசர ஊடகவியலாளர் சந்திப்பொன்றை NFGG நடாத்தியது. இன்று அதிகாலை NFGG யின் பொது வேட்பாளர் ஒருவரை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதலை அடுத்தே இந்த ஊடகவியலாளர் சந்திப்பு அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

NFGG யின் காத்தான்குடி காரியாலயத்தில் இடம் பெற்ற இச்சந்திப்பில் NFGG யின் தவிசாளர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் ,

“காத்தான்குடி நகர சபைத் தேர்தலில் எமது வெற்றிக்கான வாயப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் எமக்கெதிராக வன்முறைகளைத் தூண்டும் பிரச்சாரங்களை ஒரு குறிப்பிட்ட கட்சி செய்து வருகின்றது. அந்த வெறுப்புணர்வு பிரச்சாரத்தின் பிரதிபலிப்பாகவே இன்றைய இந்தத் தாக்குதல் சம்பவம் இடம் பெற்றுள்ளது. இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

பொலிஸார் ஆரம்பக்கட்ட விசாரணைகளை நடாத்தியுள்ளனர் காத்தான்குடியில் தேர்தல் சட்டங்களை மீறும் அப்பட்டமான நடவடிக்கைகளை கைச் சின்னத்தில் போட்டியிடும் SLFPகட்சியினர் செய்து வருகின்றனர். சட்டத்தை மீறும் வகையில் SLFP வேட்பாளர்களினால் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் இதற்கு சாட்சியாக இருக்கின்றன. இவ்வாறான தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் காத்தான்குடி பொலிஸாரின் நடவடிக்கைகள் திருப்தியாக இல்லை. கொடுக்கும் முறைப்பாடுகளுக்கு உடனடியாக அவர்கள் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரியவில்லை. இந்த அசமந்தப் போக்கினை ஏற்றுக் கொள்ள முடியாது. இது பற்றி நாம் ஏற்கனவே காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கும் உயர் மட்டத்தினருக்கும் எழுத்து மூல முறைப்பாடுகளை செய்திருக்கின்றோம். இருந்தும் நிலைமைகளில் முன்னேற்றங்களைக் காண முடியவில்லை. குற்றச் செயல்கள் நடப்பது பற்றிய தகவல் கிடைக்கும் போது பொலிசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சாவகசமாக நடவடிக்கை எடுக்க முடியாது.

சட்டம் ஒழுங்கு முறையாகவும் பாரபட்சமற்ற முறையிலும் நிலைநாட்டப்பட வேண்டும். அப்போதுதூன் நீதியான சுதந்திரமான தேர்தலை உறுதிப்படுத்த முடியும்.

இன்றைய தாக்குதலைப் பொறுத்த வரையில் இது ஒரு பாரதூரமான ஒன்றாகும். எமது வேட்பாளரின் உயிருக்கு நேரடி அச்சுறுத்தல் விடுக்கின்ற ஒரு பாரதூரமான தாக்குதலாகவே இது இருக்கிறது. இதனை நாம் கண்டிக்கின்றோம். உடனடியாக விசாரணைகளை மேற் கொண்டு காத்தான்குடி பொலிஸார் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். அதே போன்று எமது வேட்பாளர்களின் பாது காப்பையும் பலப்படுத்த வேண்டும்.”

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் NFGG யின் வேட்பாளர் பர்ஸாத் அவர்களும் கலந்து கொண்டு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக விபரித்தார்.
இந்த சந்திப்பில் NFGG யின் தேசிய அமைப்பாளர் MBM பிர்தௌஸ் நழீமி சிரேஸ்ட உறுப்பினர் AGM ஹாறூன் காத்தான்குடி பிராந்திய செயலாளர் ACM ஜவாஹிர் மற்றும் வேட்பாளர் இல்மி அஹமட் லெவ்லை உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்

27540394_1581449025285054_236786289654277087_n (1) 27540394_1581449025285054_236786289654277087_n 27540852_1581449081951715_3639765700844956870_n 27541040_1581448755285081_7212480060610643202_n 27545064_1955601708089208_4673676662692085722_n 27655373_1581449128618377_1122293676774614688_n (1) 27655373_1581449128618377_1122293676774614688_n 27655423_1581448698618420_5432767358217655673_n 27656951_1955601811422531_4993437604990530606_n 27857748_1581448948618395_7787694754427766271_n

 


கருத்துக்களை இங்கே பதியவும்

குறிப்பு:

உங்களின் மின்னஞ்சல் முகவரி பிரசுரிக்கப்படமாட்டது..
* அடையாளமிடப்பட்டவை கட்டாயம் பூரணப்படுத்தப்படல் வேண்டும்.

குறிப்பு:

வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் PMGG இன் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், ஆக்கங்களுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.