ஒன்றிணைந்த எதிர்க்கட்சி, ஐதேக உறுப்பினர்கள் சிலர் சு.கவுக்கு தாவல்December 13, 2017 4:27 pm

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆதரவளிக்க இணக்கம் தெரிவித்துள்ளனர்.

1382326308sri-lanka-freedom-partyஇன்று காலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வந்த அவர்கள், மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து தமது ஆதரவை வௌிப்படுத்தியதாக, ஜனாதிபதி ஊடகப் பரிவு கூறியுள்ளது.

இதன்படி, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய தெரணியகல முன்னாள் பிரதேசசபை தலைவர் அனுர குருப், மற்றும் உப தலைவர் எல்.டி.விஜேவர்த்தன ஆகியோரும், ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திய தெகியோவிட பிரதேசசபையின் முன்னால் உறுப்பினர் தோமஸ் சமிந்த மற்றும் அக் கட்சியின் உறுப்பினரான ஏ.வி.ஜெயரத்ன ஆகியோருமே இவ்வாறு, சுதந்திரக் கட்சிக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர்.


கருத்துக்களை இங்கே பதியவும்

குறிப்பு:

உங்களின் மின்னஞ்சல் முகவரி பிரசுரிக்கப்படமாட்டது..
* அடையாளமிடப்பட்டவை கட்டாயம் பூரணப்படுத்தப்படல் வேண்டும்.

குறிப்பு:

வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் PMGG இன் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், ஆக்கங்களுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.