காத்தான்குடி நகரசபைக்கான கட்டுப்பணத்தை NFGG இன்று செலுத்தியதுDecember 19, 2017 8:02 pm

(NFGG ஊடகப் பிரிவு)
எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் காத்தான்குடி நகர சபையில் போட்டியிடுவதற்கான கட்ட்டுப்பணத்தை NFGG இன்று செலுத்தியது. NFGG யின் சார்பாக அதன் தேசிய அமைப்பாளரும்,மட்டக்களப்பு 25498220_1928519914130721_6027756408489178360_nமாவட்டத்துக்கான அங்கீகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தருமான எம்.பி.எம். பிர்தௌஸ் இக்கட்டுப்பணத்தை செலுத்தினார்.

இதுவரை காலமும் காத்தான்குடி நகர சபையில் ஆட்சியமைத்தவர்கள் மீதான கடும் அதிருப்தியும்,விமர்சனங்களும் பெருமளவில் அதிகரித்துள்ள நிலையில், NFGGயை சூழ மக்கள் ஒன்றுகூடத் தொங்கியுள்ளனர்.

2006 ஆம் ஆண்டு நடைபெற்ற காத்தான்குடி நகர சபைத் தேர்தலில் அரசியல் பிரவேசம் மேற்கொண்ட NFGG,தொடர்ந்தும் மக்கள் நம்பிக்கையை வென்று, 2011 இல் நடைபெற்ற நகர சபைத் தேர்தலில்,முதற் தடவையையும் விட அதிகளவு வாக்குகளைப் பெற்று, மக்கள் ஆதரவைப் பெற்றது.

2006 முதல் இதுவரை காலமும், நல்லாட்சித் தத்துவத்தின் அடிப்படையில்,சிறந்த முன்மாதிரிமிக்க அரசியலை NFGGசெய்து வருகின்றது. எனவே,காத்தான்குடி மக்கள் நாளுக்கு நாள் NFGGயை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.

இப்போது NFGGபோட்டியிடும் மூன்றாவது காத்தான்குடி நகர சபைத் தேர்தலில்,NFGG யை பலப்படுத்தி,காத்தான்குடி நகர சபையில்,நல்லாட்சியை நிறுவ வேண்டும் என காத்தான்குடி மக்கள் பெரும் ஆவல் கொண்டுள்ளனர்.

இம்முறையும் NFGGயின் தேர்தல் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளவர்கள், மக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்ற, சிறந்த ஆளுமையுள்ள,நல்லாட்சிக்கான தொடர்ந்தேர்ச்சையான உழைப்பில் ஈடுபட்டுள்ள சகோதரர்களாக உள்ளனர்.

காத்தான்குடியின் எல்லாப் பகுதியிலுமுள்ள,அனைத்து துறைகளையும் சேர்ந்த சகோதரர்கள், NFGGயின் கீழ் ஒன்றிணைந்து,காத்தான்குடியில் ஒரு புதிய அரசியல் மாற்றத்தை நிகழ்த்த வேண்டும் எனற திடசங்கற்பம் பூண்டுள்ளனர்.

எனவே, NFGG இந்த நகர சபைத் தேர்தலில்,பெரும்பான்மை வட்டாரங்களில் வெற்றி பெற்று,அதிகளவு வாக்குகளைப் பெற்று,காத்தான்குடி நகர சபையில் ஒரு சிறந்த,முன்மாதிரிமிக்க ஆட்சியை நடைமுறைப்படுத்தும் என்று காத்தான்குடி மக்கள் பெரும் ஆவலுடன் உள்ளனர்.

 

 


கருத்துக்களை இங்கே பதியவும்

குறிப்பு:

உங்களின் மின்னஞ்சல் முகவரி பிரசுரிக்கப்படமாட்டது..
* அடையாளமிடப்பட்டவை கட்டாயம் பூரணப்படுத்தப்படல் வேண்டும்.

குறிப்பு:

வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் PMGG இன் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், ஆக்கங்களுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.