“சட்டம், ஒழுங்கை நிலைநாட்டி இனவாத நடவடிக்கைகளை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும்” அரசாங்கத்திடம் NFGG வலியுறுத்துகிறது!May 21, 2017 10:24 am

(NFGG ஊடகப் பிரிவு)

'கடந்த சில நாட்களாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற முஸ்லிம்களுக்கெதிரான அச்சுறுத்தல்களும். இனவாத சம்பவங்களும் அமைதியை விரும்பும் அனைத்து மக்களையும் NFGG-Logoகவலை கொள்ளச் செய்துள்ளன. மாத்திரமின்றி நாட்டின் சட்டம் ஒழுங்கை அச்சுறுத்தும் போக்காகவும் இது மாறியுள்ளது. இந்தக் குழப்பமான நிலமையை உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்' என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) வேண்டுகோள் விடுத்துள்ளது.

அண்மைக்காலமாக நாட்டில் அதிகரித்து வரும் இனவாத சக்திகளின் பரவலான நடவடிக்கைகள் தொடர்பாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்து.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அராஜக ஆட்சி ஏன் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது என்பது குறித்தோ, அல்லது அஅந்த ஆட்சி மாற்றத்தின் மூலம் சிறுபான்மை மக்கள் உள்ளிட்ட அனைத்து நாட்டு மக்களும் எதனை இந்த அரசாங்கத்திடம் எதிர்பார்த்தார்கள் என்பது குறித்தோ எவ்வித அக்கறையுமின்றி மிகுந்த அலட்சியமாக இந்த அரசாங்கம் நடந்து கொள்வதையே இந்த தொடர் சம்பவங்கள் சுட்டிக் காட்டுகின்றன.

அந்த வகையில் இனவாத சக்திகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியே இந்த அரசாங்கத்திற்கு மக்கள் ஆணை வழங்கப்பட்டது என்பதனை இந்த அரசங்கம் மறந்து விடக்கூடாது . இதனைக் கணக்கிலெடுக்காமல் அரசாங்கம் அலட்சியமாக நடந்து கொள்வதானது அப்பட்டமான நம்பிக்கைத் துரோகமாகும். அதிலும். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முக்கிய அமைச்சரான கௌரவ மனோ கணேசனின் அமைச்சு அலுவலகத்துள் அத்துமீறிச் சென்று மிரட்டுமளவுக்கு நிலமை கட்டுக்கடங்காமல் செல்கிறது.

அத்தோடு, மீண்டும் பழையபடி சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பூட்டும் பேச்சுகளும்இ இனவெறிபிடித்த நபர்களும் தூண்டி விடப்பட்டுள்ளதன் பின்னணி குறித்து பலத்த சந்தேகங்கள் தோன்றியுள்ளன.

இதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் அமைச்சரவையும் கூட்டுப் பொறுப்பேற்க வேண்டும். இது மிகத் தெளிவான சட்டஇ ஒழுங்குப் பிரச்சினையாகும். ஆனால்இ பொலிஸ் மா அதிபரோ பொலிஸ் திணைக்களமோ இதில் பாராமுகமாக நடந்து கொள்கிறது. இதனை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.

பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்துஇ நாட்டு மக்களிடையே குரோதத்தையும் வெறுப்பையும் தூண்டும் எல்லா நபர்களையும் சக்திகளையும்இ எவ்வித காலதாமதமுமின்றி சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவந்து சட்டவாட்சியை நிலைநிறுத்துமாறுஇ அரசாங்கத்தை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வலியுறுத்தி வேண்டிக் கொள்கிறது."


கருத்துக்களை இங்கே பதியவும்

குறிப்பு:

உங்களின் மின்னஞ்சல் முகவரி பிரசுரிக்கப்படமாட்டது..
* அடையாளமிடப்பட்டவை கட்டாயம் பூரணப்படுத்தப்படல் வேண்டும்.

குறிப்பு:

வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் PMGG இன் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், ஆக்கங்களுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.