ஜெனிவாவில் இராஜதந்திரிகளுடன் NFGG தவிசாளர் சந்தித்து பேச்சு வார்த்தை !November 17, 2017 8:14 pm

( NFGG ஊடகப் பிரிவு)

ஜெனிவாவுக்கான விசேட விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்ணி(NFGG)யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்நேற்று (16.11.2017) சர்வதேச இராஜதந்திரிகளுடனான பிரத்தியோ WhatsApp Image 2017-11-17 at 5.14.03 PM (1)சந்திப்புக்களை மேற்கொண்டார். ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின்வளாகத்தில் நேற்று பிற்பகல் 03.00 மணி முதல் 05.00 மணி வரை இந்த சந்திப்புக்கள் இடம்பெற்றன.

ஜெனிவாவில் பிரித்தானியவின் வதிவிடப் பிரதி நிதியாக படமையாற்றும் மனித உரிமைகளுக்கான சிரேஸ்ட ஆலோசகர் பொப் லாஸ்ட் அவர்களுடனானவிரிவான கலந்துரையாடலை பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் மேற்கொண்டார். அத்தோடு , ஐ.நாவின் முன்னாள் சிரேஸ்ட இராஜ தந்திரியும் 2002 யுத்தநிறுத்த கால பேச்சுவார்த்தைகளின் போது இலங்கைப் பிரதமரின் ஆலோசகராக செயற்பட்ட இராஜ தந்திர செயற்பாட்டாளருடனும் சந்தித்து அப்துர் ரஹ்மான்பல்வேறு விடயங்களை கலந்துரையாடினார்.

குறிப்பாக, முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் இனவாத அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல்கள், புதிய தேர்தல் முறையானது சிறுபான்மைமக்களின் பிரதிநிதித்துவத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகள், முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் காணிப்பிரச்சினைகள் மற்றும் மீள் குடியேற்றப் பிரச்சினைகள், புதியயாப்புருவாக்கம் தொடர்பிலான அவதானங்கள் போன்ற விடயங்களை மிக விரிவாக எடுத்துக்கூறினார்.

அத்தோடு அரசியல் தீர்வு முயற்சிகளில் முஸ்லிம்களும் ஒரு சம் தரப்பு என்ற முக்கியத்துவம் கொடுபடுவதில்லை என்ற விடயங்களையும் அது கடந்தகாலங்களில் ஏற்படுத்திய விழைவுகளையும் எடுத்துரைத்தார்.

இலங்கை முஸ்லிம்கள் தொடர்பில் போதுமான சர்வதேச கவனம் கொடுபடவில்லை என்பதை ஏற்றுக்கொண்ட இந்த இராஜ தந்திரிகள் அது தொடர்பில் எதிர்காலத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் ஏற்றுக்கொண்டனர்.

அத்தோடு எதிர் காலத்தில் சர்வதேச கவனத்தை இலங்கை முஸ்லிம்கள் விடயத்தில் எவ்வாறு ஈர்க்க முடியும் என்ற ஆலோசனைகளையும் வழங்கினர். இதுதொடர்பான கலந்துரையாடல்களை தொடர்வது முக்கியம் எனவும் பரஸ்பரம் வலியுறுத்தப்பட்டது.

நாளை (18.11.2017) சனிக்கிழமை வரை ஜெனிவாவில் தங்கியிருக்கும் NFGG தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் இன்னும் பல இராஜதந்திரிகளுடனான சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளார்.

IMG-20171117-WA0004 IMG-20171117-WA0005 WhatsApp Image 2017-11-17 at 5.11.20 PM (1) WhatsApp Image 2017-11-17 at 5.12.13 PM (1) WhatsApp Image 2017-11-17 at 5.13.05 PM (1) WhatsApp Image 2017-11-17 at 5.14.03 PM (1)


கருத்துக்களை இங்கே பதியவும்

குறிப்பு:

உங்களின் மின்னஞ்சல் முகவரி பிரசுரிக்கப்படமாட்டது..
* அடையாளமிடப்பட்டவை கட்டாயம் பூரணப்படுத்தப்படல் வேண்டும்.

குறிப்பு:

வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் PMGG இன் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், ஆக்கங்களுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.