ஜெனிவா மனித உரிமை மீளாய்வு மாநாட்டில் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் பங்கேற்பு! சர்வதேச இராஜ தந்திரிகளுடனும் பேச்சு வாரத்தை!!November 16, 2017 1:58 pm

(NFGG ஊடகப் பிரிவு)
ஜெனீவாவில் நடை பெற்று வருகின்ற சர்வதேச நேடுகளின் மனித உரிமை விடயம் தொடர்பான பூகோள மீளாய்வு மகா நாட்டில் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் பங்கேற்றுள்ளார். நேற்று (15.11.2017) காலை ஜெனீவா சென்றடைந்த அவர் நேற்று பிற்பகல் முதல் நாளை(17.11.2017) வரை நடை பெறுகின்ற இந்தப் பூகோள மீளாய்வு மகா நாட்டுக் கூட்டத்தில் சுயாதீனமாகப் பங்கேற்கின்றார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையினால் UPR (Universal Periodic Review) என அழைக்கப்படும் பூகோள மீளாய்வுக் கூட்டம் காலத்திற்கு காலம் தொடராக நடாத்தப்படுகின்றது. நவம்பர் 06 தொடக்கம் 17 ஆம் திகதி வரை நடாத்தப்படும் இந்த 28 ஆவது மீளாய்வுக் கூட்டத் தொடரில் உலக நாடுகளின் மனித உரிமை மற்றும் அதனோடு தொர்புபட்ட பல்வேறு விடயங்கள் பற்றி விவாதிக்கப்படுவதோடு தீர்மானங்களும் நிறைவேற்றப்படுகின்றன.

அத்தோடு ஒவ்வொரு நாடுகளும் தமது குடிமக்களுக்கான மனித உரிமைகளை உத்தரவாதப்படுத்தி சமத்துவமும் நீதியுமான ஆட்சியினை உத்தரவாதப் படுத்ததனை உறுதி செய்வதற்கான ஆலோசனைகளும் அழுத்தங்களும் இந்த மீளாய்வு மகா நாட்டின் போது கொடுக்கப்படுகின்றன.

அரசியல் ரீதியாக சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த இந்த மகா நாட்டில் இலங்கையின் மனித உரிமை மற்றும் அதனோடு தொடர்புபட்ட விடயங்களை விவாதிப்பதற்கான நேரம் நேற்று (15.11.2017) ஜெனீவா நேரப்படி 02.30 முதல் 06.30 வரை ஒதுக்கப்பட்டிருந்தது. இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் உயர்மட்ட தூதுக்குழு வொன்றும் இதில் பங்கேற்றிருற்தது. இந்தத் தூதுக்குழுவானது பிரதிமைச்சர் கலாநிதி ஹர்ச டீ சில்வா தலைமையில் ஜெனீவா கூட்டதில் பங்கேற்கிறது. இலங்கை விடயம் தொடர்பான இந்த உயர் மட்டக் கூட்டத்தில் சுயாதீனமாகப் பங்கேற்பதற்காகவே பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் விசேட தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொண்டு ஜெனீவா சென்றுள்ளார்.

நேற்றைய கூட்டத்தின் போது ஏராளமான நாடுகள் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் முன்வைத்தன. இருப்பினும் இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரத்தியேகமான பிரச்சினைகள் தொடர்பாக குறிப்பாக எதுவும் பேசப்படவில்லை.
இந்நிலையில் ஜெனீவாவை தளமாகக் கொண்டியங்கும் பல்வேறு சர்வதேச சமூகப் பிரதிநிதிகளுடனும் இராஜ தந்திரிகளுடனும் அதே போன்று சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களுடனும் விசேட சந்திப்புக்களை பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் மேற்கொள்ளவுள்ளார்.

இதன்போது இலங்கையில் தொடரும் இனமதவாத அச்சுறுத்தல்கள், வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தலுள்ள சவால்கள், வடக்கு கிழக்கு தமிழ்-முஸ்லிம் மக்கள் எதிர் கொள்ளும் காணிப் பிரச்சினைகள், அரச படைகள் மற்றும் திணைக்ளங்களினால் கையகப்படுத்தப்படும் காணிகள், புதிய தேர்தல் திருத்த சட்டம் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள், அழுத்கம போன்ற கலவரங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீடுகள் , சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதில் காட்டப்பட்டு வரும் பாரபட்சமான அணுகு முறை மற்றும் இனங்ளுக்கிடையலான நிரந்தர நல்லணிக்கத்தை ஏற்படுத்துவதில்லை உள்ள சவால்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அப்துர் ரஹ்மான் பேசவுள்ளதோடு அறிக்கைகளையும் சமர்ப்பிக்கவுள்ளார்.

நமது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான நிரந்தரத் தீர்வுகளை பெற்றுக் கொள்ளும் பொருட்டு சர்வதேச இராஜ தந்திர நடவடிக்கைகளை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் NFGGயின் தவிசாளர் அப்துர் ரஹ்மான் அவர்களின் ஜெனீவா பயணமும் சர்வதேச இராஜ தந்திரிகளுடனான சந்திப்பும் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

WhatsApp Image 2017-11-16 at 1.00.09 PM WhatsApp Image 2017-11-16 at 1.00.28 PM WhatsApp Image 2017-11-16 at 1.00.50 PM WhatsApp Image 2017-11-16 at 1.01.08 PM WhatsApp Image 2017-11-16 at 1.01.39 PM WhatsApp Image 2017-11-16 at 1.01.58 PM WhatsApp Image 2017-11-16 at 12.54.56 PM WhatsApp Image 2017-11-16 at 12.57.06 PM WhatsApp Image 2017-11-16 at 12.57.49 PM WhatsApp Image 2017-11-16 at 12.59.09 PM WhatsApp Image 2017-11-16 at 12.59.44 PM

 


கருத்துக்களை இங்கே பதியவும்

குறிப்பு:

உங்களின் மின்னஞ்சல் முகவரி பிரசுரிக்கப்படமாட்டது..
* அடையாளமிடப்பட்டவை கட்டாயம் பூரணப்படுத்தப்படல் வேண்டும்.

குறிப்பு:

வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் PMGG இன் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், ஆக்கங்களுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.