டெங்கு நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 177 ஆக உயர்வு ; 63 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்June 18, 2017 4:37 pm

(ஆர்.யசி )

நாடளாவிய ரீதியில் பரவிவரும் டெங்கு நோய் பரவல் காரணமாக இதுவரையில் 177 பேர் உயிரிழந்துள்ளதுடன் 63ஆயிரத்திற்கும் அதிகமான நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். downloadடெங்கு நோயை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதாரதுறை மற்றும் இராணுவம் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அதே நிலையில் உயர்தரத்திலான புகைவிசிறல் இயந்திரங்களை ஜேர்மனியில் இருந்து பெற்றுக் கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் பல்வேறு நோய்கள் பரவிவரும் நிலையில் டெங்கு நோயின் பரவல் அதிகரித்து வருகின்றது. நாடாளாவிய ரீதியில் பரவிவரும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரையில் 177 பேர் உயிரிழந்துள்ளதுடன் 63 ஆயிரத்து 987 பேர் இதுவரையில் இனங்காணப்பட்டுள்ளனர். அதேபோல் பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் கொழும்பு முதலாவதாக இனங்காணப்பட்டுள்ளது. கொழும்பில் மாத்திரம் இதுவரையில் 14 ஆயிரத்து, 187 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

மேலும் டெங்கு நோயை ஒழிக்க சுகாதார சேவையாட்களுடன் இணைந்து இராணுவத்தினரின் உதவி பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாகவும் டெங்கு நோயளர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றமையினால், குப்பைகளை அகற்றும் நடவடிக்கைக்கு இராணுவத்தினரின் உதவி பெறப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். அதேபோல் இலங்கையின் செயற்பாடுகளுக்கு அப்பால் உயர்தரத்திலான புகைவிசிறல் இயந்திரங்களை ஜேர்மனியில் இருந்து பெற்றுக் கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


கருத்துக்களை இங்கே பதியவும்

குறிப்பு:

உங்களின் மின்னஞ்சல் முகவரி பிரசுரிக்கப்படமாட்டது..
* அடையாளமிடப்பட்டவை கட்டாயம் பூரணப்படுத்தப்படல் வேண்டும்.

குறிப்பு:

வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் PMGG இன் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், ஆக்கங்களுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.