“தகுதியானவர்களிடம் அரசியல் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டல் மாத்தரமே அதன் உரிய பெறுமதியினையும், உயரந்த பிரயோசனத்தையும் நாம் காண முடியும்” NFGG தவிசாளர் அப்துர் ரஹ்மான்.January 14, 2018 5:22 pm

“ ஒரு பொருள் அல்லது சாதனம் யாருடைய கைகளில் இருக்கிறது என்பதைப் பொறுத்துத்தான் அதன் பெறுமதியும் பிரயோசனமும் அமைகிறது. அரசியல் அதிகாரமும் அவ்வாறானதே. அரசியலின் a (105)பெறுமதியினையும் அதன் மூலமாக அதிகூடிய பிரயோசனங்களையும் நாம் அடைந்து கொள்ள வேண்டுமென்றால் அதற்குரியவர்களை நாம் தெரிவு செய்து அரசியல் அதிகாரத்தை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்” என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் அதன் தவிசாளர் பொறியியலாளர் அப்துர்ரஹ்மான் தெரிவித்தார்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG)யினால் காத்தான்குடி பிரதேசத்தில் நடாத்தப்பட்டு வரும் தேர்தல் பிரச்சாரக்கூட்டங்களின் தொடரில், (தாருஸ்ஸலாம் )ஐந்தாம் வட்டாரத்திற்கான தேர்தல் பிரச்சாரக்கூட்டம் காத்தான்குடி -6 அமானுள்ளாஹ் வீதி சந்தியில் நடைபெற்றது. NFGG யின் 2ம் வட்டார வேட்பாளர் இல்மி அஹமட் லெப்பை அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை உறுப்பினர்கள், NFGG சார்பில் உள்ளுராட்சி சபைத்தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டு உரையாற்றினர். இப்பிரச்சாரக்கூட்டத்தில் பிரதான உரையினை ஆற்றும் பொழுதே பொறியியலாளர் அப்துர்ரஹ்மான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்

“ நாம் நாளாந்தம் உபயோகிக்கும் ஒவ்வொரு பொருட்களுக்கும் பலவிதமான பயன்பாடுகள் காணப்படுகின்றன. ஆயினும் அவற்றை உபயோகிக்கின்றவர்களைப் பொறுத்தே அவற்றின் பெறுமானங்களும், உச்ச பயன்பாடுகளும் தீர்மானிக்கப்படுகின்றன. உதாரணமாக. .ஒரு பேனா ஒரு குழந்தையின் கையில் இருக்கும் போது அதன் விழைவு வேறு. அதுவே ஒரு எழுத்தாளர், சிந்தனையாளர், அல்லது ஆராய்ச்சியாளரின் கையில் இருக்கும் போது அதன் விழைவுகள் வேறானது.

அதுபோலவே ஒரு கத்தி வைத்தியரின் கையில் இருக்கவும் முடியும்; கொலைகாரனின் கையில் இருக்கவும் முடியும். வைத்தியரின் கையிலிருக்கும் கத்தி உயிர்களைப் பாதுகாக்கும். ஆனால், கொலைகாரனின் கையிலிருக்கும் கத்தி உயிர்களைப் பாதுகாக்கும்.

அரசியல் என்பதும் இவ்வாறுதான் நோக்கப்படுதல் வேண்டும். அது தகுதியானவர்களின், தரமானவர்களின், இறையச்சமுடையவர்களின் கைகளில் ஒப்படைக்கப்படும் பொழுதே அது மக்கள் நலனுக்கான அரசியலாக மாறுகின்றது. மாறாக அது மோசமான அரசியல்வாதிகளின் கைகளில் ஒப்படைக்கப்படும் பொழுது, அது தனிநபர் அரசியலாகவும், கொள்கைகளற்ற சுயநல அரசியலாகவுமே மாறுகின்றது.

எனவே எமது கடந்த கால உள்ளுராட்சி மன்றங்களை நாம் எப்படியானவர்களின் கைகளில் ஒப்படைந்திருந்தோம் என்பதினை மக்கள் சிந்தித்துணர வேண்டிய மிக முக்கியமான காலகட்டத்தில் இருக்கின்றோம்.நாம் வாக்களித்து பெற்றுக்கொடுத்த அரசியல் அதிகாரம் என்கின்ற பொருள் கடந்த காலங்களில் நூறு வீதம் மக்களின் நலனுக்காக பயன்படுத்தப்பட்டதா? அல்லது தனிநபர் அபிவிருத்திகளுக்காகவும், சுரண்டல்களுக்காகவும், பாரிய மோசடிகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டதா என்பதில் மக்கள் இம்முறை மிகத்தெளிவாக இருக்க வேண்டும்.

இந்த உள்ளுராட்சி அதிகாரம் என்பது மக்களாகிய எமது சொத்தாகும். இதனை நாம் கடந்த காலங்களில் சிலரிடம் ஒப்படைத்திருந்தோம், இவர்கள் எந்தளவு தூரம் இந்த அதிகாரத்தினைப் பயன்படுத்தி, எமது பிரச்சனைகளில் எதனை முழுமையாக தீர்த்திருக்கிறார்கள் என்கின்ற கேள்வியினை இப்பொழுது ஒவ்வொருவரும் தங்களுக்குள் கேட்டுப்பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் கடந்த காலங்களில் மிகப்பிழையானவர்களின் கைகளில் நாம் அதனை ஒப்படைத்திருந்ததை உறுதியாக கண்டு கொள்ள முடியும்.
உதாரணமாக எமது ஊரின் மிக நீண்ட கால பிரச்சனையான குப்பை பிரச்சனைக்கு கூட ஒரு முழுமையான தீர்வினை பெற்றுத்தர முடியாது, குப்பைகளை வீதிகளில் கொட்டி ஆர்ப்பாட்டம் செய்த வரலாறுகளையே இன்றும் முன்னாள் தவிசாளர் பிரச்சார மேடைகளில் கூறிவருகிறார். குப்பைகளை வீதியில் கொட்டி ஆர்ப்பாட்டம் செயவதற்கு நமக்கு உள்ளுராட்சி மன்றங்களோ, தவிசாளர்களோ தேவை கிடையாது. எமது அன்றாக பிரச்சனைகளுக்கான மிகச்சரியான தீர்வுகளை முன்வைக்கின்ற ஆழுமையான தலைமைகளே இன்றைய தேவைகளாகும். எனவே உள்ளுராட்சி அதிகாரம் என்கின்ற பொருளினை மிகச்சரியாகவும், அமானிதமாகவும் , உச்ச பயனை அடையக்கூடிய வகையிலும் பயன்படுத்தக்கூடியவர்களின் கைகளிலேயே இம்முறை ஒப்படைக்க வேண்டும்”

இப்பிரச்சாரக்கூட்டத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் சார்பில் 5ம் வட்டாரத்தில் போட்டியிடுகின்ற அல்ஹாஜ் இர்சாத் அவர்களின் வேட்பாளர் அறிமுகமும் இடம்பெற்றதுடன், நிகழ்வில் பிரதேச பிரமுகர்கள், NFGG செயற்குழு உறுப்பினர்கள்,பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை இங்கே பதியவும்

குறிப்பு:

உங்களின் மின்னஞ்சல் முகவரி பிரசுரிக்கப்படமாட்டது..
* அடையாளமிடப்பட்டவை கட்டாயம் பூரணப்படுத்தப்படல் வேண்டும்.

குறிப்பு:

வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் PMGG இன் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், ஆக்கங்களுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.