தேவையான திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விக்னேஷ்வரனுக்கு சம்பந்தன் கடிதம்June 18, 2017 4:42 pm

குற்றவாளிகளாகக் காணப்படாத அமைச்சர்கள் தொடர்பில் தேவையான திருத்த நடவடிக்கைகளை எடுக்குமாறு தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், வட மாகாண sampanthanமுதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த திருத்த நடவடிக்கை எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள விசாரணைகளுக்கு எவ்வித தடையையும் ஏற்படுத்தாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 14 ஆம் திகதி முதலமைச்சர் விக்னேஷ்வரன் அனுப்பிய கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில், எதிர்க்கட்சித் தலைவர் நேற்று (16) இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளார்.

குற்றவாளிகளாகக் காணப்படாத அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டால், குறித்த இரண்டு அமைச்சர்களாலும் ஏனைய மாகாண சபை உறுப்பினர்களாலும் எதிர்க்கப்படக்கூடும் என்பதை கடந்த 13 ஆம் திகதி சுட்டிக்காட்டியிருந்ததாக இரா.சம்பந்தன் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக் கட்சிகளின் தலைவர்களோடு இந்த விடயம் தொடர்பில் பேசப்பட்டிருந்த போதிலும், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவுடன் கலந்துரையாடப்படாமை குறித்து கரிசனை வெளியிட்டிருந்ததையும் இரா.சம்பந்தன் நினைவுகூர்ந்துள்ளார்.

அதன் பின்னர் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவுடன் முதலமைச்சர் உரையாடியபோது, அவரும் குற்றவாளிகளாகக் காணப்படாத அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதை தெரியப்படுத்தியிருந்ததாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

14 ஆம் திகதி குற்றவாளிகளாகக் காணப்படாத இரு அமைச்சர்களு எதிராகவும் தண்டனை நடவடிக்கை அறிவிக்கப்பட்டதன் விளைவாகவே, சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசியமற்ற நடவடிக்கைகள் ஒற்றுமையின்மையை ஊக்குவிப்பதாகவும் வடமாகாண சபையின் நடவடிக்கைகளை பாதிப்பதாகவும் அமைந்துவிடக்கூடாது என எதிர்க்கட்சித் தலைவரின் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


கருத்துக்களை இங்கே பதியவும்

குறிப்பு:

உங்களின் மின்னஞ்சல் முகவரி பிரசுரிக்கப்படமாட்டது..
* அடையாளமிடப்பட்டவை கட்டாயம் பூரணப்படுத்தப்படல் வேண்டும்.

குறிப்பு:

வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் PMGG இன் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், ஆக்கங்களுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.