நாட்டில் ஏற்பட்ட பெட்ரோல் தட்டுப்பாடு குறித்து ஆராய அமைச்சரவை குழு நியமனம்November 12, 2017 11:45 am

நாட்டில் கடந்த காலங்களில் ஏற்பட்ட பெட்ரோல் தட்டுப்பாடு குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதியினால் அமைச்சரவை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

Petrol-crisis-626x380இந்த நிலைமைக்கான காரணம் மற்றும் எதிர்காலத்தில் இவ்வாறான நிலைமை ஏற்படாதிருப்பதற்கு முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து குறித்த குழுவினர் ஆராயவுள்ளனர்.

லங்கா IOC நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற பெட்ரோல் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் பெட்ரொலுக்கான தட்டுப்பாடு
ஏற்பட்டது.

இந்நிலையில், ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து வருகை தந்த எரிபொருள் கப்பலில் கொண்டு வரப்பட்ட 5,500 மெட்ரிக் தொன் எரிபொருள் சந்தைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக பெட்ரோலியத்துறை அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளார்.

எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் கையிருப்பில் காணப்பட்ட 2,700 மெட்ரிக் தொன் பெட்ரோல் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, போதுமான அளவு எரிபொருள் கிடைக்கப்பெற்றுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், 39,000 மெட்ரிக் தொன் எரிபொருளுடன் மற்றுமொரு கப்பல் நாட்டை வந்தடையவுள்ளதாக பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் களஞ்சியப்படுத்தல் பிரிவு தெரிவித்தது.

நாளை இரவு இந்த கப்பல் நாட்டை வந்தடையும் என முகாமைத்துவ பணிப்பாளர் சஞ்சீவ விஜேரத்ன தெரிவித்தார்.

 


கருத்துக்களை இங்கே பதியவும்

குறிப்பு:

உங்களின் மின்னஞ்சல் முகவரி பிரசுரிக்கப்படமாட்டது..
* அடையாளமிடப்பட்டவை கட்டாயம் பூரணப்படுத்தப்படல் வேண்டும்.

குறிப்பு:

வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் PMGG இன் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், ஆக்கங்களுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.