பாலமுனை கௌரவிப்பு நிகழ்வில் NFGG தவிசாளர் கௌரவ அதிதியாக கலந்து கொண்டார்!May 17, 2017 10:10 am

(NFGG ஊடகப் பிரிவு)

காத்தான்குடி-பாலமுனை நெசனல் விளையாட்டுக் கழகம் நடாத்திய கௌரவிப்பு விழாவில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் WhatsApp Image 2017-05-15 at 16.40.25கௌரவ அதிதியாக கலந்து கொண்டார். இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் அவர்களும் மற்றுமொரு கௌரவ அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.

பாலமுனை பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்களின் பல்வகை கல்வி அடைவுகளையும் அதற்கு காரணமாக இருந்த அதிபர்களையும், ஆசிரியர்களையும் பாராட்டி கௌரவிப்பதற்கான மாபெரும் கௌரவிப்பு நிகழ்வொன்றினை பாலமுனை நெசனல் விளையாட்டுக் கழகம் கடந்த 14.05.2017 அன்று பாலமுனையில் நடாத்தியது. பாலமுனை நெசனல் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை, GCE O/L சாதாரணதரம் மற்றும் உயர்தரம் என்பவற்றில் சிறந்த பெறு பேறுகளைப் பெற்ற மாணவர்களும் அதே போன்று இப்பிரதேசத்திலிருந்து பல்கலைக் கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்களும் பாராட்டி கௌவிக்கப்பட்டனர். அத்தோடு கல்விக் கல்லூரியில் கற்றுத் தேறிய மாணவர்களும், குர்ஆன் மனனம் மற்றும் மௌலவி பாட நெறிகளில் கற்றுத் தேறிய மாணவர்களும் இதன் போது பாராட்டப்பட்டனர்.

இப்பிரதேச மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு பங்களிப்புச் செய்த ஆசிரியர்கள் அதிபர்கள் உலமாக்கள் ஆகியோரும் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக கலந்து கொண்ட NFGG யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் கல்வி மறுமலர்ச்சியொன்று எவ்வாறு ஏற்படுத்தப்பட முடியும் என்ற தலைப்பில் விசேட உரையொன்றினை ஆற்றினார்.

நெசனல் விளையாட்டுக்கழகத் தலைவர் AGM. லாபிர் JP அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விசேட அதிதிகளாக காத்தான்குடி கோட்டைக் கல்விப்பணிப்பாளர் MACM பதுர்தீன் அவர்களும் முன்பள்ளி உதவிப்பணிப்பாளர் MIM இப்றாஹிம் உட்பட இப்பிரதேசத்தைச் சேர்ந்த பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் காத்தான்குடி ஜாமிஅத்துல் பலாஹ் அரபுக் கல்லூரியின் பிரதிப் பணிப்பாளர் மௌலவி அல்ஹாஜ் MHM புஹாரி பலாஹி அவர்கள் விசேட உரையொன்றினையும் ஆற்றினார்.

நெசனல் விளையாட்டுக்கழக உறுப்பினர்களின் நேர்த்தியான ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அக்கழகத்தின் உறுப்பினர்கள் பாலமுனை பிரதேசத்தைச் சேர்ந்த உலமாக்கள், பிரமுகர்கள் புத்திஜீவிகள் ஆசிரியர்கள் இளைஞர்கள் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


கருத்துக்களை இங்கே பதியவும்

குறிப்பு:

உங்களின் மின்னஞ்சல் முகவரி பிரசுரிக்கப்படமாட்டது..
* அடையாளமிடப்பட்டவை கட்டாயம் பூரணப்படுத்தப்படல் வேண்டும்.

குறிப்பு:

வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் PMGG இன் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், ஆக்கங்களுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.