பாலமுனை முகைதீன்ஸ் விளையாட்டுக்கழகத்திற்கு NFGG வாழ்த்து!May 12, 2017 10:02 am

உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் வெற்றி பெற்ற பாலமுனை முகைதீன்ஸ் விளையாட்டுக்கழகத்திற்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) வாழ்த்துக்களையும் NFGG-Logoபாராட்டுக்களையும் தொரிவிக்கின்றது.

மண்முனைப்பற்று பிரதேச சபையில் பதிவு செய்யப்பட்ட உதைப்பந்தாட்ட அணிகளுக்கு இடையிலான சுற்றுப்போட்டி ஒன்று நடைபெற்றது. அதன் இறுதிப் போட்டி கடந்த 10/05/2017 அன்று மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் பாலமுனையைச் சேர்ந்த முகைதீன்ஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் நெசனல் விளையாட்டுக் கழகம் ஆகியன பங்கு பற்றின. இப்போட்டியில் 1-0 என்ற கோல்கள் அடிப்படையில, முகைதீன்ஸ் விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டியது .

இதில் வெற்றியடைந்த முகைதீன்ஸ் விளையாட்டுக் கழக வீரர்கள் நிருவாகிகள் உறுப்பினர்கள் அனைவருக்கும் NFGG மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தொரிவிக்கின்றது. அதபோல் இறுதிப்போட்டி வரை வெற்றியீட்டி இறுதிப் போட்டியிலும் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்ட பாலமுனை நெசனல் விளையாட்டுக் கழகத்திற்கும் NFGG வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தொரிவிக்கின்றது


கருத்துக்களை இங்கே பதியவும்

குறிப்பு:

உங்களின் மின்னஞ்சல் முகவரி பிரசுரிக்கப்படமாட்டது..
* அடையாளமிடப்பட்டவை கட்டாயம் பூரணப்படுத்தப்படல் வேண்டும்.

குறிப்பு:

வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் PMGG இன் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், ஆக்கங்களுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.