பிரித்தானிய உயர் ஸ்தானிகராலய அதிகாரிகளுடன் NFGG சந்திப்பு!May 30, 2017 3:38 pm

(NFGG ஊடகப் பிரிவு)

சிறுபான்மை மக்களுக்கெதிராக அதிகரித்து வரும் இனவாத நடவடிக்கைகளையும், பொருளாதார இலக்குகள் மீதான தாக்குதல்களையும் முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அழுத்தங்களை IMG-20170530-WA0003 (1)அரசாங்கத்திற்கு கொடுக்கும் நடவடிக்கைகளை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) எடுத்து வருகிறது.

இந்தத் தொடரில், பிரித்தானிய உயர் ஸ்தானிகராலய அதிகாரிகளுடனான சந்திப்பொன்று இன்று (30.05.2017) மதியம் இடம்பெற்றது. உயர் ஸ்தானிகராலய கொழும்பு காரியாலயத்தில் இடம் பெற்ற நிகழ்வில் நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பாகவும், சர்வதேச சமூகம் முன்னெடுக்க முடியுமான நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இந்த சந்திப்பில் உயர் ஸ்தானிகராலய அதிகாரிகளுடன், நல்லாட்சிக்கானதேசிய முன்னணி சார்பாக அதன் தவிசாளர் அப்துர் ரஹ்மான், பொதுச் செயலாளர் நஜா முஹம்மத், பிரதித் தலைவர் சிராஜ் மஷ்ஹூர், தேசிய அமைப்பாளர் பிர்தௌஸ், தலைமைத்துவ சபை உறுப்பினர் ஜவாஹிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


கருத்துக்களை இங்கே பதியவும்

குறிப்பு:

உங்களின் மின்னஞ்சல் முகவரி பிரசுரிக்கப்படமாட்டது..
* அடையாளமிடப்பட்டவை கட்டாயம் பூரணப்படுத்தப்படல் வேண்டும்.

குறிப்பு:

வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் PMGG இன் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், ஆக்கங்களுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.