பொலிதீன் வர்த்தகர்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்January 12, 2018 4:24 pm

உயிரியல் சீர்கேடுகளை ஏற்படுத்துகின்ற பொலிதீன் மற்றும் மீள்சுழற்சி செய்ய முடியுமான பொலிதீன் வர்த்தகத்தில் ஈடுபடுகின்ற வர்த்தகர்களை பதிவு செய்யும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

1769087908election-kidsஇவ்வருட ஆரம்பத்தில் இருந்து பொலிதீன் பயன்பாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக தோன்றியுள்ள பிரச்சினையை கருத்திற் கொண்டு, இலங்கை தர நிர்ணய நிறுவனத்தால் அது சம்பந்தமான அளவுகோல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி மத்திய சுற்றாடல் அதிகாரசபையால் அந்த வியாபாரிகளை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வகையான பொலிதீன்கள் இலங்கையில் தயாரிக்கப்படுவது குறைவு என்பதுடன், பெரும்பாலும் வௌிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரியல் சீர்கேடுகளை ஏற்படுத்துகின்ற பொலிதீன் மற்றும் மீள்சுழற்சி செய்ய முடியுமான பொலிதீன் இறக்குமதி, உற்பத்தி மற்றும் அவற்றுக்கு பயன்படுத்தப்படுகின்ற சேர்க்கைகள் இறக்குமதி செய்யப்படுவது சம்பந்தமான பரிந்துரைகள் அடங்கிய அளவுகோல் இவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


கருத்துக்களை இங்கே பதியவும்

குறிப்பு:

உங்களின் மின்னஞ்சல் முகவரி பிரசுரிக்கப்படமாட்டது..
* அடையாளமிடப்பட்டவை கட்டாயம் பூரணப்படுத்தப்படல் வேண்டும்.

குறிப்பு:

வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் PMGG இன் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், ஆக்கங்களுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.