மருதமுனையில் நடாத்தப்பட்ட NFGGயின் மக்கள் சந்திப்பு!May 15, 2017 10:05 am

(NFGG ஊடகப் பிரிவு)

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) நடாத்திய மக்கள் சந்திப்பு ஒன்று கடந்த 14.05.2017 அன்று மருதமுனை கலாசார மண்டபத்தில் நடை பெற்றது.

WhatsApp Image 2017-05-15 at 16.40.25சமகால அரசியல் நிலவரங்கள் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் நிலைப்பாடுகள் என்ற தலைப்பில் இடம்பெற்ற இம்மக்கள் சந்திப்பு NFGGயின் மருதமுனை பிராந்திய செயற்குழு உறுப்பினர் அஸ்செய்க் மதீன் இஸ்லாஹி தலைமையில் இடம்பெற்றது.

இதில் NFGG யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், அதன் பிரதித் தவிசாளர் சிராஜ் மசூர், அதன் பொதுச் செயலாளர் நஜா முஹம்மட், மற்றும் தேசிய அமைப்பாளர் பிர்தௌஸ் நழீமி ஆகியோர் கலந்து கொண்டு விசேட உரைகளை ஆற்றினர். NFGGயின் மருதமுனை செயற்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் மருதமுனை பிரதேச பிரமுகர்கள், NFGGயின் அம்பாரை, மட்டக்களப்பு பிரதேசங்களைச் சேர்ந்த செயற்குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


கருத்துக்களை இங்கே பதியவும்

குறிப்பு:

உங்களின் மின்னஞ்சல் முகவரி பிரசுரிக்கப்படமாட்டது..
* அடையாளமிடப்பட்டவை கட்டாயம் பூரணப்படுத்தப்படல் வேண்டும்.

குறிப்பு:

வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் PMGG இன் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், ஆக்கங்களுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.