“முஸ்லிம் நாடுகள் இலங்கை சிறுபான்மை மக்களின் விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்” ஜெனிவாவில் OIC அமைப்பிடம் NFGG தவிசாளர் அப்துர் ரஹ்மான் வேண்டுகோள்!November 22, 2017 9:15 pm

(NFGGஊடகப் பிரிவு)

"சர்வதேச சமூகத்தின் முக்கியமான ஒரு அங்கம் என்ற அடிப்படையில் உலக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் நாடுகள் இலங்கை சிறுபான்மை மக்களின்விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதே WhatsApp Image 2017-11-22 at 8.38.16 PM (1)போன்று முஸ்லிம்களுக்கெதிராக இலக்கு வைத்து நடாத்தப்படும் இனவாதத்தாக்குதல்கள் தொடர்பில்பொருத்தமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்" என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், உலகஇஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பிடம் (OIC) வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்தோடு, ஜெனிவாவில் நடைபெற்ற இலங்கை தொடர்பிலான மனித உரிமை மீளாய்வுக்மாநாட்டில் இலங்கை முஸ்லிம்களின் விடயங்கள் தொடர்பாக முஸ்லிம் நாடுகளினால் எதுவும் பேசப்படாமை குறித்தும் தனது கவலையினை தெரிவித்தார்.

கடந்த வாரம் ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் தொடர்பான காலக்கிரம மீளாய்வு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்ஜெனிவா சென்றிருந்தார். இதன்போது, இலங்கை சிறுபான்மை மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் முஸ்லிம் சமூகம் எதிர் கொள்ளும் விசேடமானபிரச்சினைகள் தொடர்பில் பல்வேறு சர்வதேச இராஜ தந்திரிகளிடனான சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தார்.

அதில் ஒரு அங்கமாக உலக இஸ்லாமிய ஒத்துழைப்பு நாடுகளின் அமைப்பின் (OIC) ஜெனிவாவுக்கான தூதுவர் அய்சாற்றா கேன் உடன் விசேட சந்திப்பொன்றினைமேற்கொண்டிருந்தார். இந்த சந்திப்பு கடந்த 17 ஆம் திகதி மாலை ஜெனிவாவில் அமைந்துள்ள OIC தலைமைக் காரியாலயத்தில் இடம் பெற்றது.

இதன்போது கருத்துத் தெரிவித்த NFGG தவிசாளர் அப்துர் ரஹ்மான், கடந்த 15 ஆம் திகதி நடைபெற்ற இலங்கை தொடர்பிலான மனித உரிமை மீளாய்வுக் மாநாட்டில்இலங்கை முஸ்லிம்களின் விடயங்கள் பேசப்படாமை குறித்து தனது கவலையினை தெரிவித்தார்.

OIC அமைப்பின் அங்கத்துவ நாடுகளான முஸ்லிம் நாடுகள் இலங்கை அரசாங்கத்திடம் இது பற்றிய கேள்விகளை முன்வைக்கும் ஏன் தவறினார்கள் எனவும் கேள்விஎழுப்பினார். மேலும், OIC அமைப்பு சர்வதேச சமூகத்தின் முக்கிய ஒரு அங்கம் என்ற வகையில் இலங்கை சிறுபான்மை மக்கள் நலன்கள் தொடர்பில் கூடுதல் கவனம்செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

அத்தோடு முஸ்லிம்களையும் அவர்களது பொருளாதார நலன்களையும் இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் வெறுப்புணர்வு மற்றும் இனவாத நடவடிக்கைகள்தொடர்கின்ற நிலமையினையும் அதற்குக் காரணமானவர்களை கட்டுப்படுத்தும் வகையில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இலங்கை அரசு தொடர்ந்தும்தவறி வருகிறது என்பதனையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத நடவடிக்கைகளை ஆரம்பித்து அதனை பெரும் வன்முறைகளாக மாற்றியவர்களுக்கெதிரான பொலிஸ்முறைப்பாடுகள் ஏராளமாக செய்யப்பட்டிருக்கின்ற போதிலும் அவர்களின் விடயத்தில் அரசாங்கம் மிக மென்மையாகவே நடந்து கொள்கிறது என்ற விடயத்தினையும்OIC அமைப்பின் பிரதித்தூதுவரிடம் முன்வைத்தார். இதன் விழைவாக மீண்டுமொரு இனவாதத்தாக்குதல் தற்போது காலிப் பிரதேசத்தில் தொடங்கியிருக்கிறதுஎன்பதனையும் OICயின் பதூதுவரின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

பொறியியலாளர் அப்துர் ரஹ்மானின் கருத்துக்களை கவனமாகச் செவி மடுத்த தூதுவர் இந்த விடயங்களை OIC அமைப்பின் செயலாளர் நாயகத்தின் கவனத்திற்குஉடனடியாக கொண்டு செல்வதாகவும் இது தொடர்பிலான உரிய இராஜ தந்திர நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.

அத்தோடு OIC யின் செயலாளர் நாயகத்தோடு நேரடியாக இந்த விடயங்களை பேசுவதற்காக ஏற்பாடுகளைச் செய்து தருவதாகவும் உறுதியளித்தார்.

இந்த சந்திப்புக்களின் போது NFGGயின் செயற்குழு சிரேஸ்ட உறுப்பினரான முஹம்மட் இஸ்ஸதீன் அவர்களும் ஜெனிவாவில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த மனிதஉரிமைகள் செயற்பாட்டாளரான முயீஸ் வஹாப்தீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


கருத்துக்களை இங்கே பதியவும்

குறிப்பு:

உங்களின் மின்னஞ்சல் முகவரி பிரசுரிக்கப்படமாட்டது..
* அடையாளமிடப்பட்டவை கட்டாயம் பூரணப்படுத்தப்படல் வேண்டும்.

குறிப்பு:

வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் PMGG இன் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், ஆக்கங்களுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.