வடக்கு, கிழக்கு இணைப்பிற்கு ரிஷாட் எதிர்ப்பு



April 24, 2016 5:10 pm

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து, சமஷ்டி ஆட்சியை ஏற்படுத்துமாறு, வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு, அமைச்சர் ரிஷாட் பதியூதின் எதிர்ப்பு வௌியிட்டுள்ளார்.

1655481380Untitled-1தான் உள்ளிட்ட அனைத்து இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் எவரும் இந்த யோசனைக்கு இணங்கப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா - நெலுங்குளம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே ரிஷாட் பதியூதின் இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

வட மாகாண சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் தனது கட்சியின் மூன்று உறுப்பினர்களும் இதற்கு எதிர்ப்பு வௌியிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் இந்த விடயம் தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.


கருத்துக்களை இங்கே பதியவும்

குறிப்பு:

உங்களின் மின்னஞ்சல் முகவரி பிரசுரிக்கப்படமாட்டது..
* அடையாளமிடப்பட்டவை கட்டாயம் பூரணப்படுத்தப்படல் வேண்டும்.

குறிப்பு:

வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் PMGG இன் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், ஆக்கங்களுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.