Category: மருத்துவம்
செயற்கைப்பற்களை இயற்கையாக உருவாக்க முயற்சி
மனிதர்களின் ஈறுகளில் இருக்கும் குறிப்பிட்ட ரக செல்களை பயன்படுத்தி புத்தம் புதிய பற்களை உருவாக்க முடியும் என்று லண்டனில் இருக்கும் கிங்க்ஸ் கல்லூரியின் ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். அதாவது, மனிதர்களின் கடைவாய்ப்பற்களுக்கு கீழே இருக்கும் ஈறுகளில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட ரக செல்களை எடுத்து, விஞ்ஞான சோதனைக் கூடங்களில் வளர்க்கப்பட்ட எலிகளில் இருக்கும் குறிப்பிட்ட ரக செல்களுடன் இணைத்து பரிசோதனை செய்தபோது, இதிலிருந்து புதிய, முழுமையான மனித பற்கள் வளர்வதை இந்த ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். இப்படி உருவான பற்கள்,
மலேரியா காய்ச்சலுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு – சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் சாதனை
மலேரியா காய்ச்சலுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்ததில் வெற்றி கண்டுள்ளனர் சுவிட்சர்லாந்து மருத்துவக்கல்லூரி ஆராய்ச்சியாளர்கள். கடந்த 40 வருடகாலமாக மேற்கொண்டு வந்த ஆராச்சியின் பயனாக இதற்கான வெற்றியைக் கண்டுள்ளார் இந்த ஆராய்ச்க்குத் தலைமை தங்கிய பேஸெல் நகரத்தில் உள்ள மருத்துவக்கல்லூரியின் திட்டத்தலைவரான பிளேய்ஸ் ஜெண்ட்டான். மலேரியா நோயானது வைரசால் ஏற்படுவதில்லை மாறாக ஒட்டுண்ணியால் தோன்றுகிறது. ஒட்டுண்ணியால் ஏற்படும் ஒரு நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்திருப்பது இதுவே முதல் முறையாகும் என தெரிவிக்கப்படுகிறது. இதற்காக 1 1/2 வயது குழந்தை முதல் ஐந்து
உணவுக்கு மட்டுமல்ல மருந்தாகவும் பயன்படும் வெங்காயம் !!!
தூக்கமில்லாமல் கஷ்டப்படும் குழந்தைகளுக்கு சிறிய வெங்காயத்தைத் தண்ணீரில் கொதிக்க வைத்து எடுத்த தண்ணீரில் இரண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொடுக்க நல்ல தூக்கம் வரும். சிறு குழந்தைகளுக்கு உண்டாகும் டான்சில் வியாதிக்கு ஒரு சிறிய வெங்காயத்தை தோல் நீக்கி சிறிது உப்பு சேர்த்து மென்று சாப்பிட்டு, குளிர்ந்த தண்ணீரைச் சாப்பிடச் செய்வதன் மூலம் ஓரளவு குணம் கிடைக்கும். காது வலிக்கு வெங்காயத்தை நறுக்கி அதன் உள்ளே உள்ள குருத்தை இடித்துப் பிழிந்த சாறைச் சில துளிகள் எடுத்து
மெல்லிய தோற்றம் வேண்டுமா? மாம்பழத்தை தோலோடு சாப்பிடுங்கள்
உங்களது உடலமைப்பு மெலிந்து அழகாகத் தோற்றமளிக்கவும், நிறையைக் குறைக்கவும் ஒரு மாம்பழத்தை முழுமையாகத் தோலுடன் சாப்பிடுங்கள் என அவுஸ்திரேலிய ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அவுஸ்திரேலிய வடமேற்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரி ஆய்வாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்விலேயே மேற்படி விடயம் கண்டறியப்பட்டது. இந்த ஆய்வில் ஒருவரின் நிறையைக் குறைப்பதைக் காட்டிலும் நிறை உருவாவதை எவ்வாறு தடுப்பது என்பதுபற்றியே கூடுதலாக ஆராயப்பட்டது. 204 பேர்கள் 3 வாரங்களாக இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.இதன்பின்னர் அவர்களது முன்னேற்றங்களையும் எண்ணங்களையும் பதியும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். ஆய்வு முடிந்தபோது
கைத்தொலைபேசிகளால் பரவும் ஆபத்தான பாக்டீரியாக்கள்
கைத்தொலைபேசிப் பாவனைகளினால் ஒரு வித பாக்டீரியாத் தாக்கம் ஏற்பட்டு வருவதாக ஆய்வகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இப்பக்ரீரியாக்கள் சாதாரன மலசல கூட பாக்டீரியாக்களைவிட 18 மடங்கு ஆபத்தானவை எனவும் இவை மனிதர்களின் காதுகளில் ஏற்படுத்தும் தாக்கங்கள் பல வேளைகளில் குணப்படுத்த முடியாதவைகளாக காணப்படுவதாகவும் இவ்வறிக்கையில்மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது
புற்றுநோய்யைக் குணப்படுத்தகூடிய மருந்து கண்டுபிடிப்பு – இன்னும் 5 ஆண்டுகளில் சந்தைக்கு வரும்
புற்றுநோய் உட்பட பல கொடிய நோய்களைக் குணப்படுத்தகூடிய அதிசய மருந்தொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம் தலைமையிலான சர்வேதச விஞ்ஞானிகள் அடங்கிய குழு புற்றுநோய் செல்களை அழிக்கக் கூடிய மருந்தைக் கண்டுபிடித்துள்ளனர். KJ5 என்று பெயரிடப்பட்டுள்ள அந்த மருந்து புற்றுநோய் செல்களை முற்றிலும் அழித்துவிடும் திறன் கொண்டதெனத் தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை மேலும் நோய்க்கான கட்டியை ஏற்படுத்தும் செல்களை பெருகவிடாமல் அழி்க்கும் ஆற்றல் படைத்தது என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்த மருந்து இன்னும் 5 ஆண்டுகளில் மாத்திரை வடிவில் பயன்பாட்டிற்கு வரும் என்று
