அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெறும் PMGG! பேச்சு வார்த்தைகளில் பிரதான அரசியல் கட்சிகள்.


கிழக்கு மாகண சபைத் தேர்தலுக்கான முஸ்தீபுகள் சூடு பிடித்துள்ள நிலையில் பல்வேறு அரசியல் தரப்பினரும் தேர்தல் வெற்றிகளை உறுதி செய்து கொள்ளும் பொருட்டு காய் நகர்த்தல்களை மேற்கொண்டு வருகின்றனர். கிழக்கின் அரசியல் களத்தில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கமும் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக பரிணமித்துள்ளதை உணர்ந்தது கொண்டுள்ள பிரதான அரசியல் கட்சிகள் முதல் பிராந்திய அரசியல் கட்சிகள் வரை எமது இயக்கத்துடன் பேச்சு வார்த்தைக்கான அழைப்புகளை தொடர்ந்தும் விடுத்தவண்ணம் உள்ளனர்.

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கமும் தமது கொள்கைகளை எந்த வகையிலும் விட்டுக்கொடுக்காத ரீதியில் சகல தரப்பினரோடும் பேச்சுவார்த்தைக்கான அழைப்பு விடுக்கப்படும்போது அதில் கலந்து கொண்டு எமது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுதல் என்கின்ற சூரா சபை தீர்மானத்திற்கு அமைவாக பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த அடிப்படையில் மிக அண்மையில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் (04.07.2012) மற்றும் ஐக்கிய தேசிய கட்சி (05.07.20112) ஆகிய கட்சிகளின் அதி உயர் பீட தலைவர்களுடன் சில கட்ட பேச்சு வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.

இந்த பேச்சு வார்த்தைகளின் முழு விபரங்களடங்கிய அறிக்கையினை எமது இயக்கத்தின் பேச்சு வார்த்தைக்குழு சூறா சபைக்கு சமர்பித்த பின்னர் ஊடகங்களுக்கும் மற்றும் பொது மக்களுக்கும் வெளியிடவுள்ளது என்பதை வினயமுடன் அறியத்தருகிறோம்.

7 Comments

  1. mmsa says:

    welcome

  2. ameen says:

    masha allah!allah poathumaanavan

  3. pmgg would take care of unnecesesary spyes

  4. காத்தான் says:

    சூடு பிடிக்க தொடங்குது …

  5. Thariq Niyas says:

    அல்ஹம்துலில்லாஹ் இலங்கை முஸ்லிம்களின் மறு பரிணாம அரசியல் கிழக்கிலிருந்து மீண்டும் உதிக்கிறது

  6. Rifath.kky says:

    insha allah kidaikkum

  7. sjd says:

    GO ON THEN

Leave a Comment