ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு ப.மு.நி. சம்மேளனத் தலைவர் அனுப்பியுள்ள கடிதம்
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவரும், முன்னாள் நகரசபைத் தவிசாளருமான அல்ஹாஜ் மர்சூக் அகமட் லெப்பை அவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம் அவர்களுக்கு எழுதிய கடிதத்தின் பிரதி இங்கே பிரசுரிக்கப்படுகிறது.
Hon. Rauf Hakeem,MP ————————————————————————மர்சூக் அகமட் லெப்பை
Leader Sri Lanka Muslim Congress —————————————————அல் அமீன் வீதி,
Colombo-03 —————————————————————————————————-காத்தான்குடி – 06
—————————————————————————————————————-.14.07.2012
—————————————————————————————————————–Mob: 0777801382Dear Sir,
அஸ்ஸலாமு அலைக்கும்.
2012 கிழக்கு மாகாண சபைத் தேர்தல்என்னுடைய தந்தை அஷ்ஷகீத் அகமட் லெப்பையின் தலைமையில்தான் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. எனது தந்தைதான் இக் கட்சிக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என பெயரிட்டவர். அவர் இக்கட்சியை ஆரம்பிக்கும் போது இது வட கிழக்கு மாகாணத்திற்கான ஒரு பிராந்திய கட்சியாகத்தான் இருக்கவேண்டும் என விரும்பினார். ஆனால் எனது தந்தையோடு இவ் விடயத்தில் முரண்பட்ட மறைந்த மாமனிதர் அஷ்ரப் அவர்கள் இதனை தேசிய கட்சியாக பிரகடனப்படுத்தினார். ஆனால் வட கிழக்குக்கு வெளியே என் தந்தை குறிப்பிட்டது போல இன்னும் வளராமலே இருக்கின்றது.
தமிழர் கூட்டமைப்பு கூட இன்னும் தங்கள் கட்சியை வட கிழக்கிலே மாத்திரம் ஒரு பிராந்திய கட்சியாகவே தங்களை அடையாளப்படுத்தியுள்ளனர். தமிழர் கூட்டமைப்பினர் இதுவரை எதற்கும் விலை போகாத காரணத்தினால் இன்னும் அம் மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு பெற்றுள்ளனர். அசைக்க முடியாத சக்தியாக உள்ளனர்.
எது எவ்வாறு இருப்பினும் இப்போது எம்முன்னே கிழக்கு மாகாண சபைத் தேர்தல் எதிர் கொண்டுள்ளது. இந்த மாகாண சபையின் ஆட்சியை பிடிப்பதில் முஸ்லிம் காங்கிரஸ்ஸின் பங்கானது மிகவும் இன்றியமையாதது. முஸ்லிம் காங்கிரஸ் யாரோடு கூட்டமைக்கின்றதோ அவர்களால்தான் கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைக்க முடியும்.
எனவே கிழக்கு மாகாண சபையிலே முஸ்லிம் காங்கிரஸ்சுக்கு உள்ள பேரம் பேசுகின்ற சக்தியை இந்த தேர்தலிலே நாங்கள் அதிகபட்சம் பாவிக்கவேண்டும். அதாவது முஸ்லிம்களின் நலனுக்காக அதிகபட்சம பாவிக்க வேண்டும். முஸ்லிம் காங்கிரஸ்சின் நலனுக்காக அல்ல.
1994ம் ஆண்டு, 2000மாம் ஆண்டு, 2002ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பராளுமன்றங்கள் முழுக்க முழுக்க முஸ்லிம் காங்கிரஸ்ஸிலேயே தங்கியிருந்தது. முஸ்லழம் காங்கிரஸ் இல்லாவிட்டால் ஆட்சி அமைத்திருக்கவே முடியாது. 2001 ஆண்டு பாராளுமன்றத்தில் நாங்கள் சந்திரிக்கா அரசை விட்டு பிரிந்து சென்றதனால் அரசாங்கம் கலைந்தது. நாங்கள் 2002ம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியோடு சேர்ந்து அரசாங்கத்தை உருவாக்கினோம். நாங்கள் இணைந்ததால்தான் அரசாங்கம் அமைக்க முடியும் நாங்கள் பிரிந்தால் அரசாங்கம் கலையும் என்ற நிலையை உருவாக்கி இருந்தோம். இவ்வாறு முஸ்லிம் காங்கிரசுக்கு கிடைத்த பேரம் பேசுகின்ற சக்தியை மறைந்த மாமனிதர் அஷ்ரப் அவர்கள் அதிகபட்சம் முஸ்லிம் சமூகத்திற்கு பயன்படுத்தினார்கள். இந்த நாட்டிலே முஸ்லிம்களுக்கு முகவரியை தேடிக்கொடுத்தார்கள்.
இப்போது இந்த பேரம் பேசுகின்ற சக்தியை மத்திய அரசிலே இழந்து தவிக்கின்றோம். இந்த பேரம் பேசுகின்ற சக்தியை மத்திய அரசிலே இழப்பதற்கு நாங்கள்தான் காரணம். எங்களுடைய அரசியல் சாணக்கியமின்மையே காரணம். முஸ்லிம் சமூகத்தை முன்னேற்ற அஷ்ரப்பினால் உருவாக்கப்பட்ட இக்கட்சியை,நாங்கள் எங்களுடைய சொந்த முன்னேற்றத்திற்காகவும், எங்களுடைய சொந்த பொருளாதார முன்னேற்றத்திற்காகவும்தான் அஷ்ரப் இக்கட்சியை எங்களிடத்தில் விட்டுச் சென்றுள்ளார் என்ற தவறான புரிதலினால்தான் எங்களுக்கு மத்திய அரசாங்கத்திலிருந்த பேரம் பேசுகின்ற சக்தியை இழந்தோம்.
இந்த தவறை எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் நாங்கள் செய்ய முடியாது. கிழக்கு மாகாண சபையில் எங்களுக்கு உள்ள மாபெரும் ஆயுதமான பேரம் பேசுகின்ற சக்தியை மிகச் சாதுரியமாக கையாள வேண்டும்.
அரசாங்கத்தோடு சேர்ந்து கேட்க வேண்டும் என்ற நிலைபாட்டை நாங்கள் எந்த சந்தர்ப்பத்திலும் எடுக்க கூடாது. அரசாங்கமானது முஸ்லிம்களுடைய தனியார் காணியை மாத்திரமல்ல காத்தான்குடியிலே பள்ளிவாயலுக்கு சொந்தமான காணியையும், காத்தன்குடியிலே உள்ள ஜனாஸாக்களை அடக்குகின்ற மையவாடிக்காணிகளையும் அபகரிக்கின்றது. அரசாங்கத்தோடு சேர்ந்தால்தான் எம்மக்களுக்கு ஏதாவது செய்யலாம் என்ற மூடத்தனத்திலிருந்து நாங்கள் விடுபட வேண்டும்.
அரசாங்கத்தோடு சேர்ந்து செய்வதைவிட அரசாங்கத்தை எதிர்ப்பதன் மூலம் செய்ததுதான் அதிகம். நீங்கள் உங்களது கடந்த கால அனுபவங்கள் மூலம் இதனை உணர்ந்து இருப்பீர்கள் எதிர்க்கஇஎதிக்கதான் அரசாங்கம் எம்மீது வைத்திருக்கும் மரியாதையை அதிகரிக்கும். அவ்வாறு இல்லாவிட்டால் முஸ்லிம் காங்கிரஸ்காரர்களை சமாளிக்க ஒரு ப்ராடோ(Prado)வாகனம் போதும் என எங்களை அரசாங்கம் Under Estimate(குறைத்து மதிப்பிடுதல்) செய்வார்கள்.
காலமெல்லாம் தமிழர் கூட்டமைப்பினர் அரசாங்கத்தினை எதிர்க்கின்றனர். ஆனால் தமிழர் பகுதியில் அபிவிருத்திகள் நடக்கத்தான் செய்கின்றன. வேலை வாய்ப்புக்களை தமிழர்கள் பெறத்தான் செய்கின்றார்கள். தமிழர் கூட்டமைப்பு மக்கள் மத்தியில் இன்றும் செல்வாக்குடன்தான் இருக்கின்றனர்.
நான்கூட காத்தான்குடியிலே அபிவிருத்தி செய்வதென்றால் சகோதரர் ஹிஸ்புல்லாவுடன் இணைந்தால்தான் செய்யலாம் என தப்புக்கணக்கு போட்டேன். இறுதியிலே சகோதரர் ஹிஸ்புல்லாவை எதிர்த்தபோது நான் செய்ய வேலைகளைக்கூட அவரோடு சேர்ந்தபின் செய்ய இயலாமல் போனது.
எனவே இத்தேர்தலிலே தமிழர் கூட்டமைப்போடு சேர்ந்து முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட வேண்டும். அது சாத்திய படாவிட்டால் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து நின்று போட்டியிட்டு பின்னர் தமிழர் கூட்டமைப்போடு சேர்ந்து ஆட்சியமைக்க வேண்டும். கிழக்கிலே சிறுபான்மையினரின் கூட்டாட்சி உருவாக வேண்டும். அதன் மூலம் நாங்கள் இந்த அரசாங்கத்தையும் ஏன் உலகத்தையும்கூட அடிபனிய வைக்கவேண்டும். யார் என்ன சொன்னாலும் கிழக்கிலே தமிழர்களோடுதான் முஸ்லிம்கள் ஒற்றுமையாக வாழவேண்டும். ஏன் என்றால் இங்கு நாங்கள் பிட்டும் தேங்காயும் போல் புவியியல் ரீதியாக பின்னிப்பிணைந்து வாழ்கின்றோம். எங்களுக்கு முஸ்லிம் முதலமைச்சர் முக்கியமல்ல. முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாகின்ற தமிழர் ஒருவர் முதலமைச்சராக இருந்தால் போதுமானது. எங்களின் ஆதரவோடு உருவாக்கப்பட்ட தமிழ் முதலமைச்சர் நிச்சயம் நன்றியோடு முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாப்பார். அவ்வாறு அவர் எங்களது உரிமைகளை பாதுகாக்காவிட்டால் நாங்கள் ஆட்சியை மாற்றலாம்.
முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தோடு சேர்ந்து கேட்பது என்பது தமிழ் பேசும் மக்களுக்கு செய்யும் துரோகமாகவே அமையும்.
எனவேஇ எனது ஆகார்ஷியத் தலைவர் றஊப் ஹக்கீம் அவர்களே!
புது முடிவு எடுத்து புதுயுகம் படைப்போம். எதற்கும் விலைபோகாமல் எமது சமூக நலனில் மாத்திரம் அக்கறை எடுத்து எமது சிறுபாண்மை சமூகத்தின் ஒற்றுமையை நாட்டிற்கும் உலகத்திற்கும் பறைசாற்றுவோம். அல்லாஹ் நாம் செய்கின்ற நன்மையான காரியங்களை பொருந்திக் கொள்வானாக. ஆமீன்இவ்வண்ணம்
மர்சூக் அகமட் லெப்பை.
பிரதிகள்:
1. Hon. M.T.M.ஹசன் அலி.MP செயலாளர் நாயகம், (ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்)
2. Hon. பஷீர் சேகுதாவூத் MP. தவிசாளர் (ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்)
3. நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம் தமிழ் சகோதரர்களும்.

Tweet This
Share on Facebook
Digg This
Save to delicious
Stumble it
RSS Feed
பள்ளிவாயலையும் பொது அமைப்பான சம்மேளனத்தையும் பாவித்து பதவியாசைக்கு தீனி போட நினைக்கும் உங்களுக்கு இன்னுமா அறிவு வரவில்லை…?
போதாக்குறைக்கு இவர்கள் வேறு.. முன்மாதிரி அரசியல் என்ற பெயரில் புகையும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது இந்த PMGG அன்பர்களின் வாடிக்கை….
நிஃமத்தாக வழங்கப்பட்ட அறிவையம் சிந்தனையும் மட்டமாக பாவணை செய்யும் இவர்களது போக்கு என்றைக்கு விடப்படுகிறதோ அன்றைக்குத்தான் அவர்களுக்கு நல்ல காலம் ஆரம்பம்….