மலேரியா காய்ச்சலுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு – சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் சாதனை


மலேரியா காய்ச்சலுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்ததில் வெற்றி கண்டுள்ளனர் சுவிட்சர்லாந்து மருத்துவக்கல்லூரி ஆராய்ச்சியாளர்கள்.

கடந்த 40 வருடகாலமாக மேற்கொண்டு வந்த ஆராச்சியின் பயனாக இதற்கான  வெற்றியைக் கண்டுள்ளார் இந்த ஆராய்ச்க்குத் தலைமை தங்கிய பேஸெல் நகரத்தில் உள்ள மருத்துவக்கல்லூரியின் திட்டத்தலைவரான பிளேய்ஸ் ஜெண்ட்டான்.

மலேரியா நோயானது வைரசால் ஏற்படுவதில்லை மாறாக ஒட்டுண்ணியால் தோன்றுகிறது. ஒட்டுண்ணியால் ஏற்படும் ஒரு நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்திருப்பது இதுவே முதல் முறையாகும் என தெரிவிக்கப்படுகிறது.

இதற்காக 1 1/2 வயது குழந்தை முதல் ஐந்து வயது சிறுவர் வரை சுமார் 16 ஆயிரம் பேரிடம் இந்த மருந்து பரிட்சார்த்தமாக கொடுத்து சோதனை செய்து பார்க்கப்பட்டதில் ஐம்பது வீதமானோருக்கு மலேரியா குணமடைந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்காக பலரும் கடுமையாக உழைத்துள்ளனர். மலேரியா பாதிக்கப்பட்ட அனைவரும் உயிரிழப்பதைக் காட்டிலும் பாதிப்பேராவது உயிர் பிழைப்பது பெரிய வெற்றிதான் என்று ஜெனீவா மருந்து ஆராய்ச்சி மையத்தின் நிர்வாக இயக்குனர் பெர்னார்டு பிக்கோல் தெரிவித்தார்.

இந்த மருந்து நோயைத் தடுக்கிறது என்பது உறுதியான நம்பிக்கையை மருத்துவ ஆராய்ச்சியாளருக்கு மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இதுவே பெரிய சாதனை என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Comment