Recent Articles

மின்சார சபை 28 பில்லியன் ரூபாவை செலுத்த வேண்டியுள்ளது – பெற்றோலிய கூட்டுத்தாபனம்

மின்சார சபை 28 பில்லியன் ரூபாவை செலுத்த வேண்டியுள்ளது – பெற்றோலிய கூட்டுத்தாபனம்

இலங்கை மின்சார சபை இந்த வருடத்திற்காக பெற்றுக்கொண்ட உராய்வு எண்ணெய்காக இதுவரை கட்டணம் செலுத்தப்படவில்லை என பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. மின்சார சபை தாம் பெற்றுக்கொள்ளும் உராய்வு எண்ணெய்க்காக இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கட்டணம் செலுத்துவது வழமையாகும் என பெற்றோலிய வளத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது. எனினும் இந்த வருடம் இதுவரையான காலப்பகுதிக்குரிய 28 பில்லியன் ரூபாவை இலங்கை மின்சார சபை செலுத்தத் தவறியுள்ளதாக அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இலங்கை மின்சார சபையின்

பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்தார் தாய்; வவுனியாவில் சம்பவம்

பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்தார் தாய்; வவுனியாவில் சம்பவம்

வவுனியா, தாண்டிக்குளம் பிரதேசத்தில் தனது மூன்று பிள்ளைகளை கிணற்றினுள் தள்ளிவிட்ட தாய் தற்கொலை செய்வதற்கு முயற்சித்துள்ளார். இன்று முற்பகல் 8.30 அளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் குறித்த பெண்ணின் மூன்று பிள்ளைகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஒரு வயது, நான்கு வயது மற்றும் மூன்று வயதான பெண் பிள்ளைகளையே குறித்த தாய் கிணற்றுக்குள் தள்ளிவிட்டுள்ளார். எவ்வாறாயினும் பிரதேச மக்களால் குறித்த பெண் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நீதவான் விசாரணையை

அவுஸ்திரேலிய குடிவரவுக் கொள்கையில் மாற்றம்

அவுஸ்திரேலிய குடிவரவுக் கொள்கையில் மாற்றம்

அவுஸ்திரேலியாவின் குடிவரவுக் கொள்கையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவில் தரையிறங்கும் எந்தவொரு புகலிடக் கோரிக்கையாளரையும் நௌரு அல்லது பபுவா நியூகினியா தீவுகளுக்கு அனுப்ப முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த நடைமுறைக்கு அமைய அவுஸ்திரேலிய பெரு நிலப்பரப்பிற்கு வெகு தொலைவில் உள்ள தீவுகளை சென்றடையும் புகலிடக் கோரிக்கையாளர்களை மாத்திரமே குறித்த தீவுகளுக்கு அனுப்புவதற்கான இயலுமை அவுஸ்ரேலிய அரசாங்கத்திற்கு இருந்தாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலிய நிலப்பரப்பிற்குள் பிரவேசிக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு இதுவரை கிடைத்த சட்ட

நான்காவது தடவை பரீட்சைக்கு தோற்றினாலும் பல்கலைக்கழக அனுமதியை பெறமுடியும் – ப.மா.ஆ

நான்காவது தடவை பரீட்சைக்கு தோற்றினாலும் பல்கலைக்கழக அனுமதியை பெறமுடியும் – ப.மா.ஆ

2011 ஆம் ஆண்டு கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சையில் மூன்றாவது தடவையாக தோற்றிய அனைத்து பரீட்சாத்திகளும் நான்காவது தடவையாக இம்முறை உயர்தரப் பரீட்சையில் தோற்றி பல்கலைக்கழகத்தில் அனுமதி பெறுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய நான்காவது தடவையாக உயர்தரப் பரீட்சையில் தோற்றவுள்ள பரீ்ட்சாத்திகள் இம்மாதம் 20ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் க்ஷனிக்கா ஹிரிம்புரேகம கூறியுள்ளார். வழமையாக உயர்தரப் பரீட்சையில் மூன்றாவது தடவையாக தோற்றிய மாணவர்களுக்கே

நாடு திரும்பினார் ஜனாதிபதி

நாடு திரும்பினார் ஜனாதிபதி

உகண்டாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று அதிகாலை நாடு திரும்பினார். உகண்டாவுடனான இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மேற்கொண்ட இரண்டாவது விஜயம் இதுவென ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டது. உகண்டாவில் நடைபெற்ற 2013 ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய அமைப்பின், உள்ளூராட்சி மன்ற மாநாட்டின் பிரதான உரையை ஜனாதிபதி ஆற்றியிருந்தார். அத்துடன் உகண்டாவின், கம்பாலா நகரில் இலங்கைக்கான உயர்ஸ்தானிகராலயம் புதிதான திறந்துவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

விமல் வீரவன்சவிற்கு எதிராக உணவு தவிர்ப்பு

விமல் வீரவன்சவிற்கு எதிராக உணவு தவிர்ப்பு

தேர்தல் சட்டங்களை மீறியதாக சட்டத்தின் முன் நிரூபணமான ஒரேயொரு அமைச்சரவை அமைச்சர் விமல் வீரவன்சவே என, கடுவெல நகர முதல்வர் ஜி.எச். புத்ததாச தெரிவித்துள்ளார். இந்த நிலையில், இவருக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கடுவெல மாநகர சபையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார். விமல் வீரவன்ச தேர்தல் சட்டங்களை மீறியுள்ளார் என மனித உரிமை ஆணைக்குழு கூட ஏற்றுக் கொண்டுள்ளதாக அவர்

ஜெய்லானியை பாதுகாக்கக் கோரி ஜனாதிபதிக்கு அலவி மௌலானா கடிதம்

ஜெய்லானியை பாதுகாக்கக் கோரி ஜனாதிபதிக்கு அலவி மௌலானா கடிதம்

alaviகூரகலவில் அமைந்துள்ள தப்தர் ஜெய்லானி பிரதேசத்தை பாதுகாத்துத் தருமாறு கோரி மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா ஜனாதிபதிக்கு இன்று கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். ஜெய்லானியை கைப்பற்றுவதற்கும் அங்குள்ள முஸ்லிம்களின் வரலாற்றுப்புகழ்மிக்க கட்டிடங்களை அகற்றுவதற்குமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவுக்கிணங்க தொல்பொருள் திணைக்களத்தினால் கையேற்கப்பட்டுள்ள இப் பிரதேசத்தில் உள்ள கட்டிடங்கள் தற்போது அகற்றப்பட்டு வருகின்றன. எதிர்வரும் 18 ஆம் திகதி பொது பல சேனா அமைப்பினர் வாகனத் தொடரணியாகச் சென்று ஜெய்லானி பிரதேசத்தைக்

இலங்கை பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும் – நிக் க்ளெக்

இலங்கை பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும் – நிக் க்ளெக்

சர்வதேச ரீதியாக கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து கவனம் செலுத்தாத பட்சத்தில் பல்வேறு நெருக்கடிகளை இலங்கை எதிர்நோக்க நேரிடும் என பிரித்தானிய பிரதி பிரதமர் நிக் க்ளெக் தெரிவித்துள்ளார். அந்நாட்டு பாராளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் மனித உரிமை மீறல்கள் பதிவாகியுள்ள போதிலும் எதிர்வரும் நவம்பர் மாதமளவில் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்கு பிரித்தானியா தீர்மானித்துள்ளதாகவும் அவர்

“பரிசு”

“பரிசு”

உலகின் ஒவ்வொரு பகுதியிலும் எந்தவகையிலாவது ஒரு அனர்த்தம் இடம்பெற்றுக்கொண்டே இருக்குறது. அதற்காக உலக நாடுகள் பல பல்வேறு வழிகளிலும் உதவிகளைச் செய்து வருகின்றன. ஆபத்தில் உள்ளவர்களுக்கு தன்னலமில்லாமல் உதவுகிற மனப்பான்மை இறைவன் கொடுத்த ஒரு வரம் என்றே சொல்லலாம். இந்த குருந்திரைப்படத்தைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் அந்த மனப்பான்மை ஒருசில கண்ணீர் துளிகளுடன் எட்டிப்பார்க்கும். அனைவருக்கும் உதவும் மனிதனாக இருப்போம்

கிழக்கு மாகாண முதலமைச்சர் – இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு

கிழக்கு மாகாண முதலமைச்சர் – இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத்திற்கும் பாகிஸ்தான் நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகருக்குமிடையில் இன்று நண்பகல் இராஜதந்திர சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. திருகோணமலை முதலமைச்சர் செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமருக்காக வாழ்த்து செய்தியினையும் பாகிஸ்தான் தூதுவர் ஹசன் கூர்சியிடம் முதமைச்சர் கையளித்துள்ளார். கிழக்கிலுள்ள இளைஞர் யுவதிகளுக்கான தொழில்நுட்பப் பயிற்சித் திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பிலும், தொடர்ந்தும் இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது