Recent Articles

நியுயோர்க் ரயில் விபத்தில் 60 பேர் காயம்

நியுயோர்க் ரயில் விபத்தில் 60 பேர் காயம்

அமெரிக்காவின் நியுயோர்க்கில் இடம்பெற்ற பயணிகள் ரயில் விபத்தில் 60 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். 250 பயணிகளுடன் பயணித்த  இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்தில் உயிரிழப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை என்பதுடன் காயமடைந்தவர்களில் ஐவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்த விபத்து தொடர்பான விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

லண்டன் முள்ளிவாய்க்கால் நிகழ்வு: ஆயிரக்கணக்கில் திரண்ட தமிழர்கள்

லண்டன் முள்ளிவாய்க்கால் நிகழ்வு: ஆயிரக்கணக்கில் திரண்ட தமிழர்கள்

இலங்கையின் முள்ளிவாய்க்கால் பகுதியில் இறந்தவர்களின் நினைவாக லண்டனில் நடந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் கலந்துகொண்டிருந்தார்கள். பிரிட்டிஷ் தமிழர் பேரவையினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. லண்டனின் மையப்பகுதியில் ”மார்பிள் ஆர்ச்” பகுதியில் ஆரம்பித்த இந்த ஊர்வலம் ”பிக்காடிலி சர்க்கஸ்” வரை தொடர்ந்தது. முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும் என்ற தொனிப்பொருளை மையமாகக் கொண்டு இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டாலும், இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை, அந்த

யுத்த வெற்றி விழா கொண்டாட்டம்: கடற்படை படகு மூழ்கியது?

யுத்த வெற்றி விழா கொண்டாட்டம்: கடற்படை படகு மூழ்கியது?

கொழும்பு, கொள்ளுப்பிட்டி கடற்பரப்பில் நேற்று நடைபெற்ற வெற்றி விழாவின்போது கடற்படைக்கு சொந்தமான படகொன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் காணாமல் போயுள்ளதுடன் படகில் இருந்த இரண்டு கடற்படை வீரர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். விபத்தில் காணாமல் போன கடற்படை வீரதைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் விபத்துக்குள்ளான படகினை கரைக்கு கொண்டு வந்துள்ளதாகவும் கடற்படைப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். நேற்று காலி முகத்திடலில் இடம்பெற்ற யுத்த வெற்றி விழா நிகழ்வில் பங்குபற்றிய கடற்படை படகே

மீண்டும் இரத்த ஆறு பெருக்கெடுப்பதை தடுக்கும் யுகம்: ஜனாதிபதி

மீண்டும் இரத்த ஆறு பெருக்கெடுப்பதை தடுக்கும் யுகம்: ஜனாதிபதி

1990 களில் காத்தான்குடியில் தொழுது கொண்டிருந்த முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மாத்தறையில் நடத்தப்பட்ட முஸ்லிம் பேரணியின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த அமைச்சர் இன்னும் சுகமடையாத நிலையில் இருகின்றார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இன்று காலி முகத்திடலில் நடைபெற்ற யுத்த வெற்றியின் 4 ஆம் வருட கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். தீவிரவாதிகளுடன் மோதாமல் அவர்கள் கோருபவற்றை வழங்குமாறு ஆரம்பத்தில் உலகம் எமக்கு கூறியதாகவும் ஆனால் நாட்டு

வெசாக்கை முன்னிட்டு மதுபானசாலைகள், கசினோக்களுக்கு பூட்டு

வெசாக்கை முன்னிட்டு மதுபானசாலைகள், கசினோக்களுக்கு பூட்டு

வெசாக்கை முன்னிட்டு  எதிர்வரும்  24ஆம் மற்றும் 25ஆம் நாடளாவிய ரீதியிலுள்ள  மதுபானசாலைகளை  மூடப்பட்டுள்ளன. இவ்வறிப்பை கலால் திணைக்களம் மேற்கொண்டுள்ளது. மேலும் கசினோக்கள், இறைச்சிக் கடைகள், சூதாட்ட நிலையங்கள் ஆகியனவும் மூடப்படவுள்ளன

யாழ்.பல்கலைக்கழத்திலிருந்து சிங்கள மாணவர்கள் வெளியேறினார்கள்! இராணுவம் குவிப்பு! மாணவா்கள் பதற்றம்

யாழ்.பல்கலைக்கழத்திலிருந்து சிங்கள மாணவர்கள் வெளியேறினார்கள்! இராணுவம் குவிப்பு! மாணவா்கள் பதற்றம்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தினத்தை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் அஞ்சலி நிகழ்வுகளை நடாத்துவதால் ஏற்படும் பிரச்சினைகளை தவிர்ப்பதற்காக யாழ்.பல்கலைக்கழகத்திலிருந்து சிங்கள மாணவர்கள் வெளியேறிச் சென்றுள்ளனர். முள்ளிவாய்க்காலில் பலியானவர்களுக்கு நேற்று யாழ்.பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களினால் அஞ்சலி நிகழ்வு நடாத்தப்பட்டது. இதனால் அச்சமடைந்த விடுதிகளில் தங்கியிருந்த சிங்கள மாணவ மாணவிகள் விடுதிகளிலிருந்து நேற்று வெளியேறி தமது வீடுகளுக்கு சென்றுள்ளனர். இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னரே பலர் இவ்வாறு செல்லத் தொடங்கியதாக பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்.பல்கலைக்கழக சூழலில்

மையவாடி விவகாரம் தொடர்பாக நேரடி விவாதத்துக்கு காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் தயாரா? – PMGG அமீர் சவால்

மையவாடி விவகாரம் தொடர்பாக நேரடி விவாதத்துக்கு காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் தயாரா? – PMGG அமீர் சவால்

காத்தான்குடி மையவாடி விவகாரம் தொடர்பாக நேரடி விவாதம் ஒன்றை நடாத்துவதற்குத் காத்தான்குடி நகரசபை த் தவிசாளர் SHM. அஸ்பர் தயாரா? என நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறாசபை அமீர் அஷ்ஷெய்க் MBM. பிர்தௌஸ் (நளீமி) சவால் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் நேற்று வெளியிட்ட ட்விட்டர் செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். கடந்த 11.05.2013 அன்று சனிக்கிழமை மாலை காத்தான்குடி மீராபாலிகா பாடசாலைக்கு முன்பாகவுள்ள ஜாமியுழ்ழாபிரீன் பள்ளிவாசலுக்குச் சொந்தமான மையவாடிக் காணியில் இடம்பெற்ற கலவரத்தில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்திற்கு தொடர்பு

ஜெய்லானியில் கட்டிடங்கள் அகற்றப்படுகின்றன

ஜெய்லானியில் கட்டிடங்கள் அகற்றப்படுகின்றன

பலாங்கொடை ஜெய்லானி பிரதேசத்திலுள்ள பள்ளிவாசலுக்குச் சொந்தமான கட்டிடங்கள் தற்போது தொல்பொருள் திணைக்களத்தின் உத்தரவின் பேரில் அகற்றப்பட்டு வருகின்றன. இப் பணிகள் கடந்த ஒரு வார காலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜெய்லானி பிரதேசத்தில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள சுமார் 50 சிவில் பாதுகாப்பு பிரிவினரே இக் கட்டிடங்களை உடைத்து அகற்றும் பணிகளை மேற்கொண்டுவருவதாக பள்ளிவாசல் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் அரசாங்க உயர்மட்டத்தினால் ஏலவே வழங்கப்பட்ட வாக்குறுதிகள் மீறப்பட்டுள்ளதாகவும் பள்ளிவாசல்  நிர்வாகத்தினால் உடைப்பதற்காக இணக்கம் தெரிவிக்கப்பட்ட கட்டிடங்களிலும் பார்க்க மேலதிகமாக

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைகுழு முன் ஆஜரானார் ஷிராணி பண்டாரநாயக்க

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைகுழு முன் ஆஜரானார் ஷிராணி பண்டாரநாயக்க

முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிரானி பண்டாரநாயக்க இலஞ்ச ஊழல் விசாரணைகள் ஆணைகுழு முண்ணிலையில் இன்று ஆஜரானார். சொத்துக்கள் குறித்த விசாரணைகளுடன் தொடர்புடைய வாக்குமூலத்தை பெற்றுக்கொள்வதற்காக இன்று ஆணைகுழு முன் ஆஜராகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்ததாக ஆணைக்குழுவின் பணியாளர் நாயகம் லமி விஜேயவிக்ரம தெரிவித்தார். இதற்கமைய முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைகுழு முன்னிலையில் வாக்குமூலம் அளித்ததாக அவர் சார்பில் ஆஜராகும் ஜனாதிபதி சட்டத்தரணி நலின் லத்துாவஹெட்டி குறிப்பிட்டார்

பூகோள வெப்பமாதலை கட்டுப்படுத்த சட்டத்திருத்தம்

பூகோள வெப்பமாதலை கட்டுப்படுத்த சட்டத்திருத்தம்

பூகோள வெப்பமாதலை கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஜப்பான் பாராளுமன்றம் சட்ட திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இதன் ஊடாக பச்சைவீட்டு வாயுக்கள் வெளியேறுவதை கட்டுப்படுத்துவதற்கான புதிய திட்டங்களை உருவாக்கமுடியும். கியோட்டோ சாசனத்தின் இலக்குகள் உரியகாலத்தில் எட்டப்படாத நிலையில், அதற்கு பதிலாக இந்தப் புதிய திட்டங்கள் மாற்றீடு செய்யப்படவுள்ளன. பச்சைவீட்டு வாயுக்கள் வெளியேற்றத்தினை 25 வீதத்தினால் குறைக்கும் முன்னைய அரசாங்கத்தின் சர்வதேச கோட்பாடுகளிலேயே தற்போது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன