NFGG நாடாத்திய சிறப்பு மிக்க கௌரவிப்பு நிகழ்வு!



October 9, 2017 10:02 pm

(NFGG ஊடகப்பிரிவு)

மூத்த சமூக பங்களிப்பாளர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்றினை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG)  நேற்று (08.10.2017) காத்தான்குடியில் நடாத்தியது. காத்தான்குடி-ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் மாலை IMG-20171009-WA001607.00 மணி முதல் நடை பெற்ற இந்நிகழ்வில் காத்தான்குடியையும் அதனை அண்டிய பிரதேசங்களையும் சேர்ந்த மூத்த சமூக பங்களிப்பாளர்கள் 14 பேர் கௌரவிக்கப்பட்டனர். வெகு விமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வானது NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்களின் தலைமையில் நடை பெற்றது.

இந்நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக் கழக முன்னாள் உப வேந்தரும் பொது சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினருமான பேராசிரியர் ஹுஸைன் இஸ்மாயில் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டிருந்தார். அத்தோடு கௌரவ அதிதிகளாக பொருளாதார கொள்கை திட்டமிடல் அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் அல்ஹாஜ் MIM றபீக் அவர்களும் NFGயின் தலைமைத்துவ சபை உறுப்பினர் MJM மன்சூர் நழீமி அவர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.

இந்நிகழ்வின் வரவேற்பு உரையினையும் அறிமுக உரையினையும் NFGGயின் தேசிய அமைப்பாளர் MBM பிர்தௌஸ் நழீமி அவர்கள் வழங்கினார்.இதனைத் தொடர்ந்து பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்கள் விசேட உரையொன்றினையும் ஆற்றினார்.

காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களின் பாதுகாப்பிற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பல துறைகளிலும் தன்னலமில்லாது தமது அறிவாலும் பொருளாதாரத்தாலும் உழைப்பாலும் பங்காற்றிய மூத்த பிரஜைகளை மதித்து பாராட்டி கௌரவிக்கின்ற தேவை மிக நீண்ட காலமாகவே இருந்து வந்துள்ளது. அந்த இடை வெளியை நிறைவேற்றுமுகமாகவே இந்த விழாவினை NFGG ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்வின் போது காத்தான்குடி பிரதேசத்தின் மூத்த பிரமுகர்களான பின் வருவோர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

அல்ஹாஜ். எம்.ஜ.அஹமட் முகைதீன். ஜேபி

அல்ஹாஜ் எம்.ஜ.சின்னலெவ்வை. (ஓய்வு பெற்ற அதிபர்)

அல்ஹாஜ் எம்.ஏ.செய்யது முகம்மது. (ஜேபி. ஓய்வு பெற்ற அதிபர்)

அல்ஹாஜ் எம்.ஜ.ஏ.முஸ்தபா. (ஜேபி, ஓய்வு பெற்ற அதிபர்)

அல்ஹாஜ் கே.எம்.எம்.ஷரீப். (ஓய்வு பெற்ற நிர்வாக சேவை அதிகாரியும், எழுத்தாளரும்)

அல்ஹாஜ் எம்.எல்.எம்.காசீம். ஜேபி

அல்ஹாஜ் எஸ்.எஸ்.எம்.அன்சார். பீ.ஏ. (ஓய்வு பெற்ற அதிபர்)

அல்ஹாஜ் எம்.வை.ஏ.செய்யது அஹமது. (ஓய்வு பெற்ற அதிபர்)

அல்ஹாஜ் எம்.எம்.முஸ்தபா. (ஓய்வு பெற்ற அதிபர்)

அல்ஹாஜ் ஏ.எம்.எம்.இப்றாகிம். (ஓய்வு பெற்ற ஆசிரியர்)

அல்ஹாஜ் எம்.பீ.எம்.மீராசாஹிபு. ஜேபி (ஓய்வு பெற்ற காழி நீதிபதி)

ஜனாப்  எம்.எம்.ஏ.ஜூனைது. (ஓய்வு பெற்ற அதிபர்)

அல்ஹாஜ் ஏ.எல்.ஏ.கபுர்.

 

இந்நிகழ்வில் விசேட அதிதிகளாக NFGGயின் பிரதித் தவிசாளர் சிறாஜ்மசூர், அதன் தலைமைத்துவ சபை உறுப்பினர் பொறியியலாளர் பழ்லுல் ஹக் உட்பட இன்னும் பல பிரமுகர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

அத்தோடு காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த உலமாக்கள் புத்தி ஜீவிகள் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் சிவில் சமூகப் பிரமுகர்கள் மற்றும் பெண்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சிறப்பு மிக்க இந்நிகழ்வினை NFGGயின் காத்தான்குடி பிராந்திய சபை செயலாளர் MACMஜவாஹிர் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.

IMG-20171009-WA0004 IMG-20171009-WA0005 IMG-20171009-WA0006 IMG-20171009-WA0007 IMG-20171009-WA0008 IMG-20171009-WA0009 IMG-20171009-WA0010 IMG-20171009-WA0011 IMG-20171009-WA0012 IMG-20171009-WA0013 IMG-20171009-WA0014 IMG-20171009-WA0015 IMG-20171009-WA0016 IMG-20171009-WA0017 IMG-20171009-WA0018 IMG-20171009-WA0019 IMG-20171009-WA0020 IMG-20171009-WA0021 IMG-20171009-WA0022 IMG-20171009-WA0023 IMG-20171009-WA0024 IMG-20171009-WA0025 IMG-20171009-WA0026 IMG-20171009-WA0027 IMG-20171009-WA0028 IMG-20171009-WA0029 IMG-20171009-WA0030 IMG-20171009-WA0031 IMG-20171009-WA0032 IMG-20171009-WA0033 IMG-20171009-WA0034 IMG-20171009-WA0036

 


கருத்துக்களை இங்கே பதியவும்

குறிப்பு:

உங்களின் மின்னஞ்சல் முகவரி பிரசுரிக்கப்படமாட்டது..
* அடையாளமிடப்பட்டவை கட்டாயம் பூரணப்படுத்தப்படல் வேண்டும்.

குறிப்பு:

வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் PMGG இன் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், ஆக்கங்களுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.