இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதமும் கலாநிதி ரொஹான் குணரட்னவும் -January 10, 2016 11:37 am


(ஜுனைட் நளீமி)
மாதத்திற்கு இருவர் என்ற ரீதியில் ஐ.எஸ் அமைப்பில் இலங்கையைச் சேர்ந்தவர்கள் இணைந்து கொள்வதாக அரசியல் வன்முறை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான சர்வதேச மையத்தின் தலைவர் பேராசிரியர் downloadரொஹான் குணரத்ன தெரிவித்துள்ள கருத்து ஊடகங்களில் இடம்பிடித்துள்ளதை அவதானிக்க முடிக்கின்றது.

இலங்கையில் முஸ்லிம்களுக்கெதிரான பௌத்த தீவிரவாத செயற்பாடுகள் முடுக்கிவிடப்படும் போதெல்லாம் இவ்வாறான கருத்துக்கள் கலாநிதி குணரட்னவினால் முன்வைக்கப்படுவது ஒன்றும் புதிய விடயமல்ல.

2014 மே மாதம் இந்திய குண்டுவெடிப்புடன் தொடர்பாக இலங்கையைச்சேர்ந்த சாகிர் ஹுசைன், சிவபாலன் ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டபோது சாகிர் ஹுசைனை சர்வதேச பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்தி பொதுபல சேனாவிற்கு உப்பிட்ட நிகழ்வுகள் குறிப்பிடத்தக்கது.

தற்போது 'சிங்க்ஹல லே' விவகாரம் விஷவரூபம் எடுத்துள்ள நிலையில் ரொஹான் குணரத்னவின் கருத்து முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து தாக்குவதாக அமைந்துள்ளது. சாகிர் ஹுசைன் கைது செய்யப்பட்டபோது இந்தியாவில் உள்ள அமெரிக்க, இஸ்ரேல் தூதரகங்கள் ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்களின் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்ற புரளியை கிளப்பிவிட்டது போன்று இலங்கையிலும் இஸ்ரேல் தூதரகம் அமையப்பெற்றுள்ள தற்போதய நிலையில் ரொஹான் குணரத்னவின் கருத்து ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும்.

கலாநிதி ரொஹான் குணரத்ன ஒரு எழுத்தாளராகவே இலங்கையில் காணப்பட்டதுடன் 1984 தொடக்கம் 1994 வரையான காலப்பகுதியில் ஜனாதிபதியின் விஞ்ஞான ஆலோசகராக கடமையாற்றியதுடன், உலகவங்கி, யூ.எஸ். எய்ட் நிறுவனங்களிலும் ஆலோசகராக கடமையாற்றினார். இலங்கை அரசு, இலங்கை புலனாய்வு துறையுடன் நெருங்கி செயலாற்றுபவர் என்ற குற்றச்சாட்டுக்கள் இருந்த போதும் புலிகளை ஒரு பயங்கரவாத இயக்கம் என சர்வதேச அளவில் அடையாளப்படுத்துவதில் இவரது நூட்கள் பாரிய பங்களிப்பு செய்துள்ளமையை அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆப்கானில் தலிபான்களால் பமிங்க்யான் புத்தர் சிலைகள் தகர்க்கப்பட்ட பின்னர் முஸ்லிம் விரோத போக்கு இவரது எழுத்துக்களில் காணப்பட்டமையை அவதானிக்க முடியும்.

குறிப்பாக இரட்டைக்கோபுர தாக்குதல்களின் பின்னர் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி புஷஷன் பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்ற எண்ணெய்க்கான யுத்தத்தில் அவுஸ்திரேலியாவை கூட்டணியில் உள்வாங்குவதற்கு இஸ்லாமியப்பயங்கரவாதம் என்ற புதிய தொனியை நம்பகப்படுத்தி ஆப்கானில் கால்பதிக்க கலாநிதி ரொஹான் குணரத்ன அமெரிக்காவினால் பயன்படுத்தப்பட்டார். இவரது பயங்கரவாதம் குறித்த பல்வேறு கருத்துக்களும் ஆய்வுகளும் பெரும்பாலானவை வெறும் யூகங்க்கலாகவே அமைந்திருந்தன என்பதனை பல்வேறு இராணுவ ஆய்வாளர்களும் குறிப்பிட்டுள்ளனர்.. உதாரணமாக மலேசிய அரசுக்கும் பிலிப்பைனின் மோரோ இஸ்லாமிய இயக்கத்திற்கும் தொடர்பு காணப்படுவதாக ரொஹான் குணரத்ன குறிப்பிட்ட பின்னர் தமது கருத்துக்களை மாற்றியமைத்தமையும், பாளி குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட ஹம்பாலி என்பவர் அவுஸ்த்ரேலியாவிற்கு பலதடைவகள் வந்து சென்றிருப்பதாக தமது நூலில் குறிப்பிட்ட பின்னர் அவுஸ்திரேலிய துறை புலனாய்வினை மேற்கொண்டு மேற்படி குணரத்னவின் கருத்து உன்மைகலற்றது என குறிப்பிட்டமையும் என பல்வேறு உதாரணங்களை விமர்சகர்கள் முன்வைத்துள்ளனர்.

தற்போதைய சூழ்நிலையில் குணரத்னவின் இலங்கையில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்களின் செயற்பாடு குறித்த கருத்துக்கள் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஆப்கானிலிருந்து அமெரிக்கப்படைகள் வாபஸ் வாங்கப்பட்ட பின்னர் தெற்காசியாவில் புதிய தளங்களை உருவாக்க வேண்டியநிலையில் அமெரிக்கா உள்ளது. மாலைதீவு தளம் அமைப்பதற்கான அமெரிக்காவின் வேண்டுகோளை நிராகரித்துள்ளது. சீன, இந்திய பிராந்திய ஆதிக்க சக்திகளை எதிர்கொள்வதற்கு பௌதீக ரீதியில் இலங்கையைத் தவிர பொருத்தமான இடம் வேறொன்றும் இல்லை என்பது எவரும் அறிந்த விடயம். என்ற போதும் சீன ஆதிக்கம், ரஷÊயாவின் சமகால பிராந்திய அச்சுறுத்தல்களும் ஆக்கிரமிப்புக்களும் அமெரிக்க சார்பு தளங்களையும் இராணுவ நிகழ்ச்சித்திட்டங்களையும் தெற்கசியப்பிராந்தியத்தில் உருவாக்குவதற்கான அவசர தேவையாக அமைந்துள்ளது. எனவேதான் ஏற்கனவே அமெரிக்க பின்புலத்தில் திட்டமிடப்பட்டுள்ள ஆசிய- பசுபிக் பிராந்திய பயங்கரவாத குழுக்கள் தொடர்பான ஆய்வு மையம் ஒன்றினை அமைப்பதுடன் அதனூடாக பிராந்திய நாடுகளுக்கு பயங்கரவாதம் என்ற புரளிகளை கட்டவிழ்த்து அமெரிக்கஇ இஸ்ரேல ஆதிக்கத்தினை காலூண்டச் செய்வதற்கான நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே தற்போது கலாநிதி குணரட்னவினால் ஐ.எஸ் பயங்கரவாதம் இலங்கையில் காலூன்ருகின்றது என்ற கருத்து திட்டமிட்டு பரப்ப படுகின்றது.

சாகிர் ஹூசைன் கைது செய்யப்பட்டதுடன் பாக் தீவிரவாதிகள் இஸ்ரேல், அமெரிக்க தூதரகங்க்களை இந்தியாவில் வைத்து தாக்க திட்டமிட்டுள்ளனர் என்ற கதையாடல்கள் அமெரிக்காவை இலங்கைக்குள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை என்ற போர்வையில் சுதந்திரமாக தளம் அமைத்து செயற்பட வழியமைக்கும் முன்னேற்பாடாகவே அமைந்ததுபோனÊறு அண்மையில் இலங்கையில் அமைக்கப்பட்ட இஸ்ரேலிய தூதரக நடவடிக்கைகளுக்கு பெரும்பான்மை சமூகத்தின் ஆசிர்வாதத்தினை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பாகவே கலாநிதி குணரட்னவினÊ கருத்து அமைந்துள்ளது.

எது எவ்வாறிருந்த போதும் இலங்கை முஸ்லிகள் ஒரு போதும் பயங்கரவாதத்திற்கு துணைபோவதற்கு தயாராக இல்லை என்பது யதார்த்தமானதாகும். அதே போன்று சமூகத்தில் சுயநலனÊ;களுக்காக சமூகவிரோதச்செயல்களிலும், குற்றச்செயல்களிலும் ஈடுபாடுடயவர்களை அவதானமாக அடையாளம் கண்டுகொள்ள முயற்சிப்பதுடன் அத்தகைய நபர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெருமிடத்து பாதுகாப்புத்தரப்புக்கு தெரியப்படுத்துவதும் கடமையுமாகும்


கருத்துக்களை இங்கே பதியவும்

குறிப்பு:

உங்களின் மின்னஞ்சல் முகவரி பிரசுரிக்கப்படமாட்டது..
* அடையாளமிடப்பட்டவை கட்டாயம் பூரணப்படுத்தப்படல் வேண்டும்.

குறிப்பு:

வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் PMGG இன் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், ஆக்கங்களுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.