உலகம் விளையாட்டு வணிகம் பொழுதுபோக்கு அறிவியல் தொழில்நுட்பம் பாகிஸ்தான் மசூதியில் தற்கொலைப்படைத் தாக்குதல்: சுமார் 100 பேர் உயிரிழப்புFebruary 17, 2017 11:08 pm

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திலுள்ள மசூதியொன்றில் நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் சுமார் 100 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Pakistan-Sufi-shrine-bombingசி‌ந்து மாகாணத்தின் ஷெவான் ஷெ‌ரிஃப் என்ற இடத்தில் சுஃபி பிரிவினரின் லால் ஷாபாஸ் மசூதியில் ஏராளமானோர் திரண்டிருந்த போது, ‌ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

முதலில் கையெறி குண்டுகளைக் கொண்டு தாக்குதல்களை நடத்தியதாகவும் பின்னர் தமது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்ததாகவும் ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட சுமார் 100 பேர் உடல் சிதறி‌ உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த பலர‌து நிலைமை கவலைக்கிடமாக இருப்ப‌தால் உ‌யிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் ‌என அஞ்சப்படுகிறது.‌

தாக்குதலை வன்‌மையாகக் கண்‌டித்துள்ள பிரதமர்‌ நவாஸ் ஷெரிப், ‌இதற்கு எதிராக மக்கள் ஒருங்கி‌ணைய வேண்டும் என‌‌ கேட்‌‌டுக் கொண்டுள்ளார்‌.


கருத்துக்களை இங்கே பதியவும்

குறிப்பு:

உங்களின் மின்னஞ்சல் முகவரி பிரசுரிக்கப்படமாட்டது..
* அடையாளமிடப்பட்டவை கட்டாயம் பூரணப்படுத்தப்படல் வேண்டும்.

குறிப்பு:

வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் PMGG இன் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், ஆக்கங்களுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.