சவாலை சந்திக்கும் பிரிட்டன் பொருளாதாரம்June 28, 2016 11:10 pm

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற பிரிட்டன் எடுத்த முடிவினை தொடர்ந்து, பிரிட்டனின் பொருளாதார நிலைப்பாட்டுக்கு ஒரு புதிய சவாலாக, பிரிட்டனின் பொருளாதார வாய்ப்புக்களை, money-1760_960_720மேலும் இரண்டு கடன் மதிப்பீட்டு முகமைகள் குறைத்து மதிப்பீடு செய்துள்ளன.

கருத்தறியும் வாக்கெடுப்பின் பாதிப்பினால், பிரிட்டனின் பொது நிதி ஆதாரங்கள் மீது ஏற்பட்டுள்ள அச்சங்கள், தங்களின் மதிப்பீட்டை குறைக்க நேர்ந்ததாக ஃபிட்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் பிரிட்டனின் பொருளாதார நிலை மேலும் குறையக்கூடிய சாத்தியம் குறித்து ஸ்டாண்டர்ட் ஆண்ட் பூவர்ஸ் கடன் மதிப்பீடு முகமை நிறுவனம் எச்சரித்துள்ளது.

திங்கட் கிழமையன்று ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் ஏற்பட்ட பங்குச்சந்தை வீழ்ச்சியை தொடர்ந்து, ஆசிய பங்குச்சந்தை மீண்டும் சரிவில் தொடங்கியுள்ளது.


கருத்துக்களை இங்கே பதியவும்

குறிப்பு:

உங்களின் மின்னஞ்சல் முகவரி பிரசுரிக்கப்படமாட்டது..
* அடையாளமிடப்பட்டவை கட்டாயம் பூரணப்படுத்தப்படல் வேண்டும்.

குறிப்பு:

வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் PMGG இன் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், ஆக்கங்களுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.