சவுதியில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் பாதுகாப்பு அதிகாரிகள் நால்வர் பலிJuly 5, 2016 11:22 am

சவுதி அரேபியாவில இஸ்லாமியர்களின் புனித தலமான மதீனாவில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் பாதுகாப்பு அதிகாரிகள் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

90288010_mediaitem90286855-626x380மேலும் 5 பேர் தாக்குதலில் சிக்கி காயமடைந்துள்ளனர்.

பள்ளிவாசலுக்குள் பிரவேசிக்க அனுமதி மறுக்கப்பட்டதுடன் குறித்த நபர் பள்ளிவாசலுக்கு வௌியில் நிறுத்தப்பட்டதையடுத்து குண்டை வெடிக்கச் செய்துள்ளார்.

இஸ்லாமியர்களின் புனித தலமான மக்காவுக்கு அடுத்த புனித தலமாக மதீனா கருதப்படுகின்றது.

இதேவேளை, நேற்றைய தினத்தில் சவுதி அரேபியாவில் இரு நகரங்களில் குண்டுத்தாக்குல்கள் நடத்தப்பட்டன.

தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் உரிமைகோரவில்லை.

எனினும் ஐ.எஸ் ஆயுதக்குழு தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு உலக வாழ் இஸ்லாமியர்கள் நோன்பு பெருநாளை கொண்டாட ஆயத்தமாகி வரும் நிலையில் துருக்கி, பங்களாதேஷ் மற்றும் ஈராக்கில் நடத்தப்பட்ட தாக்குதல்களின் தொடர்ச்சியாக இந்த தாக்குதலும் இடம்பெற்றுள்ளது,


கருத்துக்களை இங்கே பதியவும்

குறிப்பு:

உங்களின் மின்னஞ்சல் முகவரி பிரசுரிக்கப்படமாட்டது..
* அடையாளமிடப்பட்டவை கட்டாயம் பூரணப்படுத்தப்படல் வேண்டும்.

குறிப்பு:

வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் PMGG இன் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், ஆக்கங்களுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.