நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிராந்திய அலுவலகத்தின் மீது குண்டுத் தாக்குதல்.February 12, 2018 12:38 pm

(NFGG ஊடகப் பிரிவு)

காத்தான்குடி கடற்கரை வீதி (CB காசிம் லேன்) யில் (CB காசிம் லேன்) அமைந்துள்ள நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிராந்தியக் காரியாலயத்தில் இன்று (12.02.2018) அதிகாலை வைக்கப்பட்ட குண்டுகளில் IMG-20180212-WA0010இரண்டு வெடித்துள்ளன. மேலும் எட்டுக் குண்டுகளை விசேட அதிரடிப்படையினர் அவ்வளாகத்திலிருந்து மீட்டுள்ளனர்.
இக்குண்டு வெடிப்பின் காரணமாக கட்டிடத்தின் ஒரு பகுதி சேதமாக்கபட்டுள்ளதுடன் அங்கிருந்த பொருட்கள் சிலவும் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன.
கடந்த 10 ஆம் திகதி நடந்து முடிந்த உள்ளு}ராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்பாக இதே வகையான குண்டொன்று நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பொதுப் பட்டியல் வேட்டபாளர் ஒருவரின் வீட்டிலும் வைக்கப்பட்டு அது வெடித்ததன் காரணமாக அவரும் அவரது குடும்பத்தினரும் மயிரிழையில் உயிர் தப்பினர் என்பதும்; குறிப்பிடத்தக்கது.
கடந்த காலங்களில் தேர்தல் முடிந்ததன் பின்னால் இவ்வாறான அடாவடித்தனங்களும், தாக்குதல்களும் அவ்வப்போது சிரேஸ்ட அரசியல் வாதி ஒருவரின் ஆதரவாளர்களினால் நடாத்தப்பட்டு வருகின்றது அந்த வகையிலேயே இந்த சம்பவமும் இடம் பெற்றிருக்கலாம் எனவும் தெரிய வருகிறது. இக்குண்டு வெடிப்பு தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை உறுப்பினர் பொறியியலாளர் பழிலுல் ஹக் அவர்கள்.
இன்று அதிகாலை 3.55 மணியளவில் எமது பிராந்திய அலுவலகம் குண்டுத்தாக்குதலுக்கு இலக்கானது. இச்சம்பவம் எமது உயிரையும் உடமைகளையும் இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக இருக்கலாம்.
ஜனநாயக நாட்டில் தேர்தலில் போட்டி போடும் உரிமை அனைவருக்கும் உண்டு ஆனால் தேர்தவின் பின்னர் இவ்வாறான பழிவாங்கும் செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத் தக்க விடயமாகும்.
இது தொடர்பாக நாங்கள் காத்தான்குடி பொலிஸாருக்கும் ஏனைய உயர்மட்டங்களுக்கும் முறைப்பாடுகளைச் செய்துள்ளோம்.
அத்தோடு காத்தான்குயிலுள்ள உலமாக்கள் புத்தி ஜீவிகள் மற்றும் பொது நிறுவனங்கள் இவ்விடயத்தில் தலையிட்டு இவ்வாறான செயற்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இத்தாக்குதல் சம்பவம் நடை பெற்ற வேளையில் பொலிஸார் றோந்து நடவடிக்கையில் ஈடு பட்டிருந்ததாகவும் நாம் அறிகிறோம் எனவும் தெரிவித்தார்.

20180212_090813 20180212_090816 20180212_090818 20180212_090837 20180212_090851 20180212_090944 20180212_091024 20180212_091102 20180212_091106 20180212_091158 20180212_091209 20180212_091228 20180212_091237 20180212_091250 20180212_091259 20180212_091302 20180212_091309 20180212_091321 20180212_091328 20180212_091334 20180212_091345 20180212_091708 20180212_093157 20180212_093650 20180212_093712 20180212_095838 20180212_095840 20180212_095917 20180212_100049 IMG-20180212-WA0001 IMG-20180212-WA0002 IMG-20180212-WA0003 IMG-20180212-WA0004 IMG-20180212-WA0005 IMG-20180212-WA0006 IMG-20180212-WA0007 IMG-20180212-WA0008 IMG-20180212-WA0009 IMG-20180212-WA0010 IMG-20180212-WA0011 IMG-20180212-WA0012


கருத்துக்களை இங்கே பதியவும்

குறிப்பு:

உங்களின் மின்னஞ்சல் முகவரி பிரசுரிக்கப்படமாட்டது..
* அடையாளமிடப்பட்டவை கட்டாயம் பூரணப்படுத்தப்படல் வேண்டும்.

குறிப்பு:

வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் PMGG இன் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், ஆக்கங்களுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.