“மனித உரிமை ஆணையாளரின் விசேட அறிக்கையில் இலங்கை வன்முறைகள் தொடர்பாக சுட்டிக்காட்டப்படும்” மனித உரிமை ஆணையக பிரதம அதிகாரி அப்துர் ரஹ்மானிடம்தெரிவிப்பு!March 7, 2018 12:52 am

(NFGG ஊடகப்பிரிவு)

 இவ்வாரம் வெளியிடப்பட்டுள்ள   ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் உயர்மட்ட அறிக்கையில் இலங்கை  வன்முறைகள் தொடர்பாக சுட்டிக்காட்டிவலியுறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக   WhatsApp Image 2018-03-07 at 12.25.03 AMNFGG தவிசாளரிடம்  உறுதியளிக்கப்பட்டுள்ளது. 

 ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான மனித உரிமை ஆணையக பிரதம அதிகாரி ஜொய்ற்றி சங்கேரா அவர்களை திங்கட்கிழமை  ( 5.3.2018) மாலை NFGG தவிசாளர் அப்துர்  ரஹ்மானும்அவரது  குழுவினரும்  சந்தித்த போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது . குறித்த சந்திப்பு ஜெனிவாவில் அமைந்துள்ள ஐ.நா. பிரதான கட்டிடத்தொகுதியில் இடம் பெற்றது.

 ஜெனிவாவில் நடை பெற்று வரும் ஐ.நா மனித உரிமை கூட்டத் தொடரில் பங்குபற்றுவதற்காக பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் ஜெனிவா சென்றுள்ளார்.

இவர் தற்போது இலங்கையில் முஸ்லிம்களை இலக்கு வைத்து நடாத்தப்பட்டுவரும் இனவாத வன்முறைத் தாக்குதல்கள் தொடர்பாக பல்வேறு உயர்மட்டசந்திப்புக்களை அவர் மேற் கொண்டு வருகின்றார்.  அந்த வகையிலேயே ஜொய்ற்றி சங்கேரா அவர்களுடனான சந்திப்பும் மேற் கொள்ளப்பட்டது. 

 திட்டமிட்ட வகையில் அம்பாரையில் நடாத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு கெதிரான வன்முறைகள் எவ்வாறு கண்டிப் பிரதேசத்திலும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன  என்ற விடயங்களை அப்துர் ரஹ்மான் எடுத்துக் கூறினார்.அத்தோடு பதட்டம் நிலவிய சூழலிலும் முறையான பாதுகாப்பு  ஏற்பாடுகளைபொலிசார் வழங்கவில்லை என்பதனையும்  அவர் சுட்டிக் காட்டினார்.

 மேலும் இனவாதப் பிரச்சாரங்களை முன்னின்று நடத்துபவர்களே இந்த வன்முறைத் தாக்குதல்களின் போதும் களத்தில் நின்றுள்ளனர் என்பதனையும்மனித உரிமை ஆணையக பிரதம அதிகாரியிடம் அவர் சுட்டிக்காட்டினார்.

 இதன் போது கருத்து தெரிவித்த  மனித உரிமை ஆணையக பிரதம அதிகாரி 

இலங்கையில் தொடரும் இந்த வன்முறைகள் பற்றி தாம் பெரும் கவலைஅடைந்துள்ளதாகவும் இவற்றை உடனடியாக கட்டுப்படுத்தி இலங்கை அரசுஉரிய பாதுகாப்பினை வழங்க வேண்டும் என்ற அழுத்தங்களைவழங்குவதாகவும் உறுதியளித்தார்.

அத்தோடு இவ்விடயம் தொடர்பாக எதிர்வரும் வியாழக்கிழமை மனித உரிமைமாநாட்டில் ஆணையாளர் சயீட் ஹொசைன்  அவர்கள்  வெளியிடவுள்ள விசேடஉயர்மட்ட அறிக்கையிலும் இந்த விடயம் சுட்டிக்காட்டப்படும்  எனவும்உறுதியளித்தார். அத்தோடு,  தொடரும் வன்முறைகளை உடனடியாகக்கட்டுப்படுத்த வேண்டும் என்ற தமது கவலைகளை அரசாங்கத் தரப்பிற்குதெரிவிக்க முடியும் எனவும் உறுதியளித்தார்.

இந்த சந்திப்பினைத் தொடர்ந்து நேற்றைய  வன்முறைகள் தொடர்பானஆவணங்களும்  குறித்த   மனித உரிமை ஆணையக பிரதம அதிகாரிக்குஅனுப்பி வைக்கப்பட்டன.

WhatsApp Image 2018-03-07 at 12.25.03 AM WhatsApp Image 2018-03-07 at 12.26.53 AM

 


கருத்துக்களை இங்கே பதியவும்

குறிப்பு:

உங்களின் மின்னஞ்சல் முகவரி பிரசுரிக்கப்படமாட்டது..
* அடையாளமிடப்பட்டவை கட்டாயம் பூரணப்படுத்தப்படல் வேண்டும்.

குறிப்பு:

வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்குப் பிறகே வெளியிடப்படும். வாசகர்களின் கருத்துகள் PMGG இன் கருத்துகள் அல்ல. நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதல், ஆக்கங்களுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே பதிவு செய்ய வேண்டாம்.